பிரித்தானியாவில் இந்திய வம்சாவளியை சேர்ந்தவருக்கு சிறப்பு விருது! எதற்காக தெரியுமா? குவியும் வாழ்த்துக்கள்

Report Print Santhan in பிரித்தானியா
632Shares

பிரித்தானியாவில் கொரோன பரவல் நேரத்தில் சிறப்பான சேவைகளில் ஈடுபட்ட நபர்களில் இந்திய வம்சாவளியை சேர்ந்த நபருக்கு ராயல் அகாடமி சிறப்பு விருதுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

உலகையே அச்சுறுத்தி வரும் இந்த கொரோனா வைரஸ் காலத்திலும், தங்கள் உயிரைப் பற்றியும் பொருட்படுத்தாமல், சிறப்பாக செயலாற்றி வரும் நபர்களுக்கு ஒவ்வொரு நாடுகளிலும், அவர்களை கவுரவிக்கும் வகையில் சிறந்த விருது கொடுக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் பிரித்தானியாவில், கொரோனா பரவல் தடுப்பு, நிதி திரட்டுதல் உள்ளிட்ட சேவைகளில் சிறப்பாக ஈடுபட்ட, இந்திய வம்சாவளியை சேர்ந்த, நரம்பியல் நிபுணர், ரவி சோலங்கி, UK's Royal Academy of Engineering President's Special விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இவரும், பிரித்தானியாவை சேர்ந்த, ரேமன்ட் சீம்ஸ் என்ற தகவல் தொழில்நுட்ப வல்லுனரும் இணைந்து, சுகாதார பணியாளர்கள் தேவையான பொருட்கள் பெறுவதற்கு வசதியாக, வலைதளம் உருவாக்கி தந்துள்ளனர்.

இதையொட்டி, இவர்கள் இருவர் உட்பட, 19 பேர் சிறப்பு விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு சமூகவலைத்தளங்களில் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்