வெளிநாட்டவர்களுக்காக பிரித்தானிய விமான நிலையம் ஒன்றில் புது வித கொரோனா சோதனை முறை அறிமுகம்

Report Print Balamanuvelan in பிரித்தானியா
243Shares

பிரித்தானியாவுக்கு வரும் வெளிநாட்டவர்களின் கால விரயத்தைக் குறைக்கும் வகையில், அதாவது கட்டாய தனிமைப்படுத்தல் நேரத்தைக் குறைப்பதற்காக, பிரித்தானிய விமான நிலையம் ஒன்றில் புதுவித கொரோனா சோதனை முறை ஒன்று அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

தற்போது பிரித்தானியாவுக்கு வரும் பெரும்பாலான நாடுகளைச் சேர்ந்த பயணிகள், தங்களை 14 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டிய கட்டாய சூழ்நிலை உள்ளது.

அந்த கால விரயத்தைக் குறைக்கும் நோக்கில், பிரித்தானியாவின் ஹீத்ரோ விமான நிலையத்தில் இந்த புதிய சோதனை முறை அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

அதன்படி, பிரித்தானியாவின் ஹீத்ரோ விமான நிலையம் வழியாக பிரித்தானியாவிற்கு வருபவர்களிடமிருந்து மாதிரிகள் எடுக்கப்பட்டு, ஏழு மணி நேரத்திற்குள் கொரோனா சோதனைகளின் முடிவுகள் அவர்களுக்கு தெரிவிக்கப்படும்.

அதன் பின், தங்கள் வீடுகளிலிருந்தவண்ணமே, சில நாட்களுக்குப் பிறகு, அவர்கள் இரண்டாவது கொரோனா பரிசோதனையை செய்யவேண்டும்.

இந்த இரண்டு சோதனைகளிலும் அவர்களுக்கு கொரோனா இல்லை என்று தெரியவந்துவிட்டால், அவர்கள் தனிமைப்படுத்தலிலிருந்து 14 நாட்களுக்கு பதிலாக, சீக்கிரமே வெளியேறலாம்.

இதனால், பெரும் கால விரயம் தவிர்க்கப்படும். இதேபோன்ற இரட்டை சோதனை முறை, ஜேர்மனி மற்றும் ஐஸ்லாந்து உட்பட பல நாடுகளில் ஏற்கனவே நடைமுறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்