பெற்ற மகனை கொலை செய்தது ஏன்? நீதிமன்றத்தில் குற்றவாளியாக பிரித்தானிய தாய்

Report Print Balamanuvelan in பிரித்தானியா
638Shares

தான் பெற்ற மகனை கொலை செய்தது ஏன் என நீதிமன்றத்தில் விளக்கவேண்டிய ஒரு அசௌகரியமான சூழல் ஒரு பிரித்தானிய தாய்க்கு ஏற்பட்டது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆக்டனிலிருக்கும் பொலிஸ் நிலையம் ஒன்றிற்கு சென்ற ஒரு பெண் கொடுத்த தகவலின் பேரில், பொலிசார் வீடு ஒன்றிற்கு விரைந்தனர்.

அங்கு அவர்கள் கண்ட காட்சியின் தாக்கம் எப்படி பொலிசாரையே பாதித்தது என்பதை, வெளியான பெண் பொலிசார் ஒருவரின் புகைப்படம் அப்பட்டமாக வெளிப்படுத்தியது.

ஆம், 544,000 பவுண்டுகள் மதிப்புடைய அந்த ஆடம்பர வீட்டின் பிரமாண்ட படுக்கையறையில் பட்டு மெத்தையில் 10 வயது சிறுவன் ஒருவன் படுக்கவைக்கப்பட்டிருந்தான்.

தனக்கு பிடித்த பொம்மைகளின் நடுவில் படுத்திருந்த அந்த சிறுவனுக்கு உயிரில்லை. ஆம், Dylan Freeman (10) என்ற அந்த சிறுவனை, அவனை பெற்ற தாயாகிய Olga Freemanனே கொலை செய்திருந்தார்.

அவனது வாய்க்குள் ஸ்பாஞ்ச் துண்டு ஒன்றை திணித்து அவனது மூச்சை நிறுத்தி விட்டதாக Olga நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இப்படி பெற்ற மகனை கொல்லவேண்டிய சூழல் ஏன் அந்த பெண்ணுக்கு ஏற்பட்டது? Dylan ஒரு ஆட்டிசக் குறைபாடு கொண்ட குழந்தை.

கடுமையான ஆட்டிச பாதிப்பு கொண்டிருந்ததோடு, Dylanக்கு Cohen Syndrome என்ற மரபணுக்குறைபாடும் இருந்தது.

அவனால் தனது எண்ணங்களை வெளிப்படுத்த, பேசக்கூட தெரியாது. வளர வளர, அவனது முரட்டுத்தனம் அதிகரிக்க ஆரம்பித்தது. (ஹெலன் கெல்லர் என்னும் வாய் பேச முடியாத, கண் தெரியாத பெண்ணைக் குறித்த திரைப்படம் ஒன்றை பார்த்தவர்கள், இந்த சிறுவனின் முரட்டுத்தனத்தை ஓரளவு புரிந்துகொள்ளலாம்.)

ஏற்கனவே, Dylanஐ கவனித்துக்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட Rakesh Shukla (25) என்ற வாட்டசாட்டமான இளைஞராலேயே அவனை கவனித்துக்கொள்ள முடியாமல், நான்கே நாட்களில் அவர் வேலையை விட்டு நின்றுவிட்டது குறிப்பிடத்தக்கது.

சிறப்புக் குழந்தைகளுக்கான பள்ளி ஒன்றில் பயின்று வந்த Dylan, கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிக்கும் செல்ல இயலாத நிலை ஏற்பட, அவனை 24 மணி நேரமும் கவனித்துக்கொள்ளும் பொறுப்பு Olga மீது விழுந்துள்ளது.

Olgaவின் தோழியான Edita Surpickaja என்பவர் கொஞ்சம் அவனை கவனித்துக்கொள்ள உதவியிருக்கிறார், ஆனால், அவராலும் முழு நேரமும் உதவ முடியாத சூழல்.

மகனை கவனித்துக்கொள்வதற்காக உள்ளூர் கவுன்சிலின் உதவியை நாடியிருக்கிறார் Olga, ஆனால், அவர்களிடமிருந்தும் எந்த உதவியும் கிடைக்கவில்லை.

ஆக, தனியாக போராடிப் பார்த்து, இயலாமல் போய், பெற்ற மகனையே கொல்லத் துணிந்துவிட்டார் Olga.

Olga, பிரசித்திபெற்ற புகைப்படக்கலைஞர் Dean Freeman என்பவரின் மனைவி என்பதும், நீண்ட காலத்திற்கு முன்பே இருவரும் பிரிந்துவிட்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்