இனி இந்த நாட்டிலிருந்து பிரித்தானியாவுக்கு வருபவர்களுக்கு கட்டாய தனிமைப்படுத்தல்? கசிந்த தகவல்

Report Print Basu in பிரித்தானியா
465Shares

குரோஷியாவிலிருந்து பிரித்தானியா வரும் மக்களுக்கு கட்டாய தனிமைப்படுத்தப்பட்ட நடவடிக்கைகள் விதிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிரித்தானியாவின் பாதுகாப்பான பயண நாடுகள் பட்டியலில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்படுத்தலாமா என்பது குறித்து விவாதிக்க அமைச்சர்கள் இன்று பிற்பகுதியில் லண்டனில் சந்திக்கின்றனர்.

குரோஷியா பட்டியலில் இருந்து நீக்கப்பட்டால், அந்நாட்டிலிருந்து பிரித்தானியா திரும்பும் மக்கள் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட வேண்டும்.

சமீபத்திய வாரங்களில் ஸ்பெயின், பிரான்ஸ் மற்றும் மால்டா நாடுகளில் கொரோனா அதிகரித்தை தொடர்ந்து பிரித்தானியா அரசாங்கம் இதே முடிவை எடுத்தது, இதன் காரணமாக சுற்றுலாப் பயணிகள் அவசரமாக நாடு திரும்ப வழிவகுத்தது.

குரோஷியாவில் சமீபத்திய நாட்களில் கொரோனா வழக்குகளில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. குரோஷிய நேற்று கால்பந்து லீக் சாம்பியனான Dinamo Zagreb வீரர் உட்பட 219 புதிய வழக்குகள் பதிவனாது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்