பிரித்தானியாவில் இங்கு ஊரடங்கு விதிகள் இன்னும் கடுமையாக்கப்படுகிறது! வெளியான முக்கிய தகவல்

Report Print Santhan in பிரித்தானியா
1847Shares

கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்த பின்னர், வடக்கு அயர்லாந்தில் ஊரடங்கு விதிகள் இன்னும் கடுமையாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கொரோனா பரவுதலின் போது R எண்ணிக்கை 1.3-ஆக உயர்ந்துள்ளது. R என்பது ஒரு மனிதனிடமிருந்து மற்றொருவருக்கு கொரனா பரவல் எந்த அளவிற்கு பரவுகிறது என்பதை குறிப்பது ஆகும்.

இதையடுத்து, கொரோனா பரவல் அதிகரித்ததான் காரணமாக, வடக்கு அயர்லாந்தில் மக்கள் கடுமையான பூட்டுதல் விதிகளை எதிர்கொள்கின்றனர்.

சுகாதார அமைச்சர் ராபின் ஸ்வான் இது குறித்து கூறுகையில், நாங்கள் இப்போது நடவடிக்கை எடுக்காவிட்டால், கொரோனாவின் பரவலை தடுக்க தாமதமாகிவிடும் என்று நான் அஞ்சுகிறேன்.’

ஹாட்ஸ்பாட் பகுதிகளில் பி.எஸ்.என்.ஐ அமலாக்கத்தில் கவனம் செலுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் மைக்கேல் மெக்பிரைட் ஸ்டோர்மான்ட், நிர்வாகத்தின் இந்தமுடிவுகளை ஆதரித்ததுடன், இதன் மூலம் ஒட்டுமொத்தமாக சமூகத்திற்கு ஒரு சமிக்ஞையை அனுப்புகிறார்கள் என்று நான் நம்புவதாக தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்