வெளிநாட்டில் பிரித்தானியரை சுற்றி வளைத்து கைவிலங்கிட்ட பொலிசார்: கோபத்தை ஏற்படுத்திய செய்தியின் பின்னணி

Report Print Balamanuvelan in பிரித்தானியா
166Shares

அவுஸ்திரேலியாவில் பிரித்தானியர் ஒருவரை சுற்றி வளைத்த பொலிசார், அவருக்கு கைவிலங்கிட்டதால் அவர் கோபமடைந்தார்.

ஆனால், வெளியாகியுள்ள வீடியோ ஒன்றைப் பார்க்கும்போது, அவர் கைவிலங்கிடப்பட்டதன் காரணமும், அது நியாயம்தானா என்ற கேள்விக்கான பதிலும் கிடைக்கிறது.

அவுஸ்திரேலியாவின் மெல்போர்னில் நடந்து சென்ற பிரித்தானியர் ஒருவரை சுற்றி வளைத்த பொலிசார், அவருக்கு கைவிலங்கிட்டதோடு, அபராதமும் விதித்தனர்.

காரணம், மெல்போர்னில் நடமாடுபவர்கள் மாஸ்க் அணியாவிட்டால் 200 டொலர்கள் அபராதம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அப்படிப்பட்ட சூழலில், மாஸ்க் அணிய மறுத்ததோடு, தான் ஏன் மாஸ்க் அணியவில்லை என்பதையும் அவர் கூற மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதாலேயே அவருக்கு கைவிலங்கிடப்பட்டுள்ளது.

நீங்கள் எனக்கு கைவிலங்கிட்டிருக்கிறீர்கள், இது தேவையா, நீங்கள் என்னை துன்புறுத்துகிறீர்கள் என்று அவர் மீண்டும் மீண்டும் கூற, எதனால் நீங்கள் மாஸ்க் அணியவில்லை என்பதைக் கூறுங்கள் என்கிறார் பொலிசார் ஒருவர்.

எனக்கு மாஸ்க் அணிவதிலிருந்து விதி விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது என்று அவர் கூற, என்ன விதிவிலக்கு என்று கேட்கிறார் பொலிசார்.

எனக்கு விதி விலக்கு இல்லை என்பதை நீங்கள்தான் நிரூபிக்கவேண்டும் என மீண்டும் மீண்டும் வாதிடுகிறார் அந்த பிரித்தானியர்.

அப்படியானால் ஒன்று செய்வோம், நீங்கள் விதியை மீறியதாக வழக்கு தொடருவோம், நீங்கள் நீதிமன்றத்தில் வாதிடலாம் என்று பொலிசார் கூற, நான் ஒன்றும் நீதிமன்றம் செல்லத்தேவையில்லை, நீங்கள் இதற்கு அனுபவிப்பீர்கள் என்கிறார் அந்த பிரித்தானியர்.

ஜூலை 30 முதல் பொது இடங்களில் மாஸ்க் அணிவது கட்டாயம் என்றும், மாஸ்க் அணியாதவர்களுக்கு 200 டொலர்கள் அபராதம் விதிக்கப்படும் என்றும் விக்டோரியா மாகாண பிரீமியர் Daniel Andrews அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்