இராணியாகும் பயிற்சிகளை தொடங்கிய கேட் மிடில்டன்: பிரித்தானிய அரண்மனையில் இருந்து கசிந்த தகவல்

Report Print Arbin Arbin in பிரித்தானியா
2224Shares

பிரித்தானிய இளவரசர் வில்லியத்தின் மனைவி கேட் மிடில்டன் அடுத்த சில ஆண்டுகள், இராணியாருக்கான பயிற்சிகளை மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இளவரசர் வில்லியம் மற்றும் கேட் மிடில்டன் தம்பதிகளுக்கு கடந்த 2011-ல் திருமணம் முடிந்தது. இவர்களுக்கு மூன்று பிள்ளைகளும் உள்ளனர்.

அரச குடும்பத்தில் திருமணம் முடித்துக் கொண்டுள்ள நிலையில், கேட் மிடில்டனுக்கு முக்கியமாக இரண்டு பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அதில் ஒன்றினை அவர் ஏற்லனவே நிறைவேற்றியுள்ளார். இன்னொன்று பட்டத்து இளவரசராக கருதப்படும் சார்லஸ் மரணமடைந்த பின்னர் இளவரசர் வில்லியம் மன்னராக பொறுப்பேற்கும் வேளையில், அவருக்கு பக்கபலமாக அனைத்து விவகாரங்களிலும் உதவுவதேயாகும்.

வில்லியம்- கேட் தம்பதிகளின் திருமணத்திற்கு பிறகு, கேட் அவ்வாறான பயிற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார் என்றாலும், இனி அந்த பயிற்சிகள் கட்டாயமாக்கப்படும் என கூறப்படுகிறது.

இது வில்லியம் முடிசூடும் வரை அரண்மனை நிபுணர்களால் வழங்கப்படும் என்றே தெரியவந்துள்ளது.

கேட் மிடில்டனிடம் ஒப்படைக்காப்பட்ட இரண்டு முக்கிய பொறுப்புகளில் ஒன்றான வாரிசுகளை உருவாக்குதல் என்பதை அவர் நிறைவேற்றிவிட்டதாக கூறும் அரண்மனை வட்டாரங்கள்,

தற்போது அவருக்கு பிரித்தானியாவின் ராணியாக நடைமுறைகளை கற்றுத்தருவதாக தெரிவித்துள்ளனர்.

இளவரசர் வில்லியம் மன்னராக முடிசூடிய பின்னர் கேட் மிடில்டனின் பொறுப்புகளும் அதிகமாகும்.

பிரித்தானிய ராணியார் தற்போது வகிக்கும் அனைத்து பொறுப்புகளும், கேட் மிடில்டன் வசம் வந்து சேரும்.

அதற்கான தயாரிப்பு நடவடிக்கைகளை மிடில்டன் அடுத்த சில ஆண்டுகளில் தீவிரப்படுத்த இருக்கிறார் என தெரிய வந்துள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்