பிரதமர் பதவியிலிருந்து விலகுகிறாரா போரிஸ் ஜான்சன்? பிரித்தானியாவில் பரபரப்பை ஏற்படுத்திய தகவல்

Report Print Balamanuvelan in பிரித்தானியா
797Shares

கொரோனாவிலிருந்து விடுபட திணறுவதால், ஆறு மாதங்களில் போரிஸ் ஜான்சன் பிரித்தானிய பிரதமர் பதவியிலிருந்து விலகுவதாக செய்தி வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது.

அதுவும், இந்த தகவலை வெளியிட்டவர் பிரதமரின் ஆலோசகரான Dominic Cummingsஇன் மாமனாரான Humphry Wakefield (84) என்பதால், அது உண்மையாக இருக்குமோ என்ற சந்தேகமும் ஏற்பட்டது.

ஆனால், இன்று அவசர அவசரமாக பிரதமர் இல்லம் இந்த தகவலை மறுத்துள்ளது. போரிஸ் ஜான்சன் ஏப்ரல் மாதத் துவக்கத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஒரு வாரத்திற்கும் மேலாக மருத்துவமனையில் செலவிட்டார்.

கொரோனா தொற்றுக்கு ஆளான பலரும் அதன் தாக்கத்தால் இன்னமும் அவதியுற்று வருவதால், மக்களில் சிலர் இந்த செய்தியை நம்பியிருக்கலாம்.

இதற்கிடையில், Sir Humphry இப்படி ஏடாகூடமாக அறிக்கைகள் வெளியிட்டு குழப்பம் ஏற்படுத்துவது இதுமுதல் முறையல்ல.

ஏற்கனவே, பிரித்தானிய உள்துறைச்செயலரான பிரீத்தி பட்டேலை அவர் இதேபோல் வம்புக்கிழுத்ததால் சர்ச்சைக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்