லண்டனில் படித்து வந்த தமிழ் பெண்ணை கடத்தி, கட்டாயப்படுத்தி நடந்த சம்பவம்! சர்ச்சையில் சிக்கிய பிரபல மதபோதகர்

Report Print Santhan in பிரித்தானியா
10476Shares

தமிழகத்தை சேர்ந்த பெண்ணை வங்கதேசத்திற்கு கடத்தி சென்ற கும்பல், அந்த பெண்ணை மிரட்டி மதமாற்றம் செய்யப்பட்ட சம்பவத்தில், இந்த செயலை செய்ததே மதபோதர் என்பதால், இப்போது இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

சென்னை ராயபுரம் பகுதியை சேர்ந்த மிகப்பெரிய தொழிலதிபரின் மகள், உயர்படிப்பிற்காக பிரித்தானியாவின் தலைநகரான லண்டனிற்கு சென்றுள்ளார்.

ஆனால், திடீரென்று அந்த பெண் கடந்த மே மாதம் 28-ஆம் திகதி முதல் திடீரென்று காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது தந்தை, இது குறித்து உடனடியாக சென்னை மத்திய உள்துறை அமைச்சகத்திடம் புகார் அளித்தார்.

இதையடுத்து இந்த புகாரின் அடிப்படையில் விசாரிப்பதற்கு உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பிக்க, கடந்த 16-ஆம் திகதி முதல் இது தொடர்பான விசாரணை துவங்கியது.

அப்போது அந்த பெண்ணை கடத்தியது வங்கதேசத்தை சேர்ந்த மதபோதகார் நபீஸ் என்பது பொலிசாருக்கு தெரியவந்துள்ளது.

இவர், ஜாகிர் நாயக் நாயக்குடன் சேர்ந்துதான் ராயபுரம் பெண்ணை லண்டனில் கடத்தி சென்றுள்ளார். கடத்தியது மட்டுமின்றி, அந்த பெண்ணை மிரட்டியும், கட்டாயப்படுத்தியும் மதமாற்றம் செய்துள்ளார்.

இந்த கடத்தல் செயலில் ஈடுபட்ட நபீஸ் வங்கதேசத்தில் ஒரு அரசியல்வாதியின் மகன் என்பதால், இந்த தைரியமான செயலில் இறங்கியுள்ளார். ஆனால் அவர் ஏன் அந்த பெண்ணைக் கடத்தினார் என்பது தெரியவில்லை.

இதனால் அவர் பணம் கேட்டு மிரட்டுவதற்காக இப்படி செய்தாரா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், மிரட்டி பணம் பறிப்பது என்றால், எதற்காக மதமாற்றம் செய்ய வேண்டும்? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. அப்படியெனில் பாலியல் அடிமையாக மாற்றுவதற்கு இந்த கடத்தல் நடத்தப்பட்டதா என்ற கோணத்திலும் விசாரணையை முடக்கியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து, நபீஸுக்கு தீவிரவாதிகளுக்கு தொடர்பு உள்ளதா? இதில் சர்ச்சைக்குரிய மதபோதகர், ஜாகிர் நாயக்கின் பங்கு என்ன? அவர் ஏன் இதில் சம்பந்தப்பட வேண்டும்? என்றெல்லாம் கேள்விகள் எழுந்தபடி உள்ளன.

இதனால், இந்த பெண்ணை கடத்திய பின்னணியில் லவ் ஜிகாத் தான் முக்கிய காரணமாக இருப்பதாகவும் குற்றசாட்டு வலுவாக எழுந்துள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்