புயலில் சிக்கி நடுவானில் தள்ளாடிய பயணிகள் விமானம்.. திறமையாக தரையிறக்கிய விமானி! சிக்கிய திகிலூட்டும் காட்சி

Report Print Basu in பிரித்தானியா
1209Shares

பிரான்சிஸ் புயலால் ஏற்பட்டுள்ள பலத்த மழை, காற்று மற்றும் வெள்ளத்தால் பிரித்தானியா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக மஞ்சள் எச்சரிக்கை விடுத்திருந்த வானிவை ஆய்வு மையம், தற்போது ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. செவ்வாய்க்கிழமை மதியம் மற்றும் மாலையில் பிரித்தானியா மற்றும் வேல்ஸில் சில பகுதிகளில் பலத்த காற்று வீசும் என எச்சரித்துள்ளது.

சாலை, ரயில், விமானம் மற்றும் படகு சேவைகள் பாதிக்கப்படக்கூடும் என்பதால் நீண்ட பயணங்கள் ரத்து செய்யப்படலாம் எனவும். சில சாலைகள் மற்றும் பாலங்கள் மூடப்பட வாய்ப்புள்ளது மற்றும் மின்வெட்டு ஏற்பட ஒரு நல்ல வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலத்த காற்று இருந்த போதிலும் பர்மிங்காம் விமான நிலையம் தொடர்ந்து எந்த பாதிப்புமின்றி செயல்பட்டு வருகிறது.

பிரான்சிஸ் புயலால் ஏற்பட்ட கடுமையான காற்றின் மத்தியில் பர்மிங்காம் விமான நிலையத்தில் பயணிகள் விமானம் ஒன்று தத்தலாடிய படி தரையிறங்கிய திகிலூட்டும் காட்சி இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.

விமானம் நடுவானில் வலது இடது என இருப்பக்கமும் தத்தலாடிய போதும் விமானி திறமையாக வெற்றிகரமாக விமானத்தை தரையிறக்கினார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்