வெளிநாட்டில் நோய்வாய்ப்பட்ட பிரித்தானிய பெண்: உயிரிழந்தால் மட்டுமே உதவுவதாக கூறிவிட்ட அரசு

Report Print Balamanuvelan in பிரித்தானியா

துருக்கிக்கு தனது மருமகனைக் காணச் சென்ற இடத்தில் பிரித்தானிய பெண் ஒருவர் நோய்வாய்ப்பட்டார்.

Carole Fleming (67) என்ற அந்த பெண்ணுக்கு ஒரு நாளுக்கான மருத்துவ செலவுகள் தற்போதைக்கு 1,000 பவுண்டுகளாக இருக்கும் நிலையில், மருத்துவர்கள் அவரது சிகிச்சையை மாற்ற இருப்பதால் இனி நாளொன்றிற்கு 10,000 பவுண்டுகள் செலவிடவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையில், பிரித்தானிய தூதரகத்தை உதவிக்காக நாடியபோது, Carole உயிரோடிருக்கும்வரை அவரை பிரித்தானியாவுக்கு அழைத்துச்செல்ல முடியாது என அவர்கள் தெரிவித்துவிட்டதாக ஒரு அதிரவைக்கும் தகவலை தெரிவிக்கிறார் அவரது மகளான Stephanie Uyar (36).

எனவே, ஏர் ஆம்புலன்ஸ் ஒன்றை ஏற்பாடு செய்வதற்காக 25,000 பவுண்டுகளை சேகரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார் Uyar.

Carole ஏற்கனவே மார்பக புற்றுநோயிலிருந்து விடுபட்டவர். எனவே, துருக்கியிலுள்ள மருத்துவர்கள், Caroleஇன் தற்போதைய பிரச்சினைக்கு காரணம், அவரது புற்றுநோயுடன் தொடர்புடையது என்று எண்ணுகிறார்கள்.

ஆகவே, அவருடைய செலவுகளை ஏற்றுக்கொள்ள அவரது காப்பீட்டு நிறுவனம் மறுத்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

இப்படிப்பட்ட சூழலில், இறந்தால் மட்டுமே Caroleஐ பிரித்தானியாவுக்கு அனுப்ப உதவமுடியும் என பிரித்தானிய தூதரகம் கூறிவிட்டது Uyarஐ வருத்தத்திற்குள்ளாக்கியுள்ளது.

உலகின் ஐந்தாவது பணக்கார நாடு நம்முடையது, அப்படியிருக்கும்போது, தனது குடிமகள் ஒருவரை நாட்டுக்கு அழைத்துவர அதனால் முடியாதா என்று கேட்கிறார் Uyar.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்