லண்டனில் பேருந்துக்காக நிற்கும் பெண்கள் தான் அவன் குறி! மிக மோசமான செயலை செய்த குற்றவாளி.. முழு தகவல்

Report Print Raju Raju in பிரித்தானியா

லண்டன் பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்த பெண்களை குறி வைத்து அவர்கள் முன்னிலையில் மோசமாக நடந்து கொண்ட குற்றவாளிக்கு மூன்றாண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தெற்கு லண்டனில் உள்ள பேருந்து நிலையங்கள் மற்றும் Brixton Tube நிலையத்துக்கு செல்லும் Leslie Malcolm (57) என்ற நபர் அங்கு தனியாக நிற்கும் பெண்களை குறிவைத்து அவர்கள் அருகில் செல்வார்.

பின்னர் தனது உடையை களைந்து மோசமான செயலை செய்து வந்துள்ளார்.

இப்படி கடந்தாண்டு டிசம்பர் மாதம் முதல் கடந்த மே மாதம் வரையில் செய்துள்ளார், Leslieன் அருவருப்பான செயலால் அதிர்ச்சியடைந்த பெண்கள் சிலர் இது குறித்து பொலிசில் புகார் அளித்தனர்.

இதை தொடர்ந்து பொலிசார் Leslie-னை தேடி வந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் 1ஆம் திகதி அவர் வீட்டுக்கே சென்று கைது செய்தனர்.

அவர் மீதான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

நீதிபதி கூறுகையில், Leslie மிகவும் ஆபத்தான நபர் என முத்திரை குத்தப்படுகிறார்.

ஏற்கனவே கடந்த 1996ஆம் ஆண்டு பெண்ணிடம் தவறாக நடந்து கொண்ட வழக்கில் அவர் தண்டனை அனுபவித்திருக்கிறார் என கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்