லண்டனில் பேருந்தில் டிரைவர் மீது எச்சில் துப்பிய நபருக்கு நேர்ந்த கதி! என்ன தண்டனை தெரியுமா?

Report Print Santhan in பிரித்தானியா

லண்டனில் பேருந்தின் கதவுகளை டிரைவர் திறக்காத காரணத்தினால், அவர் மீது எச்சில் துப்பிய நபர் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளான்.

பிரித்தானியாவின் தலைநகரான லண்டனின் Lewisham-ல் இருக்கும் Brockley Road பகுதியில் வசித்து வருபவர் Kevin Simpson(45).

இவர் கடந்த 13-ஆம் திகதி புதன் கிழமை அதிகாலை 4.30 மணியளவி N11 பேருந்தில் டிரைவர், கதவை திறக்க மறுத்ததால், இவர் ஜன்னல் வழியாக டிரைவரின் முகத்தி எச்சிலை துப்பியுள்ளார்.

டிரைவர் ஜன்னலை மூடிய பின்னரும் ஜன்னலில் எச்சிலை துப்பியுள்ளார். அதன் பின் டிரைவர் எச்சிலின் உமிழ் நீர் மாதிரியை எடுத்து கொண்டு, லண்டன் நகர காவல்துறை அதிகாரிகளிடம் இந்த சம்பவம் குறித்து கூறியுள்ளார்.

அதன் பின் அந்த உமிழ்நீர் மாதிரியை வைத்து பொலிசார், Kevin Simpson-னின் முகவரியை கண்டுபிடித்து, அதைத் தொடர்ந்து கைது செய்துள்ளனர்.

தற்போது இருக்கும் கொரோனா சூழ்நிலையில், மிகவும் அருவருப்பாக செயலில் ஈடுபட்டதால், பொலிசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.

கடந்த 18-ஆம் திகதி லண்டன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடந்த விசாரணையின் போது Kevin Simpson குற்றத்தை ஒத்துக் கொண்டதால், அவருக்கு 18 வார சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மேலும் இந்த சம்பவம் குறித்து பொலிசார் கூறுகையில், தற்போது இருக்கும் இந்த கொரோனா சூழ்நிலையில், இதுபோன்ற அருவருப்பான முறையில், அச்சங்கள் அதிகரித்து வரும் நேரத்தில், நமது தனிப்பட்ட ஆரோக்கியத்தைப் பாதுகாக்க வேண்டிய அவசியம் என்பதால், இது போன்ற நிகழ்வுகளை நாங்கள் மிகவும் தீவிரமாக எடுத்து, இந்த குற்றங்களைச் செய்தவர்களை நீதிக்கு கொண்டு வருகிறோம் என்பதை பொதுமக்களுக்கு உறுதியளிக்க விரும்புகிறோம், என்று தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்