இதனால் பேரழிவு.. தயவு செய்து மாற்றிவிடுங்கள்: பிரித்தானியா அரசாங்கத்திடம் வணிகத் தலைவர்கள் முக்கிய கோரிக்கை

Report Print Basu in பிரித்தானியா
532Shares

பிரித்தானியாவில் கடுமையான அலுவலக பாதுகாப்பு வழிகாட்டுதல்களால் ஊழியர்கள் பணிக்கு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக வணிகத் தலைவர்கள் கூறியுள்ளனர்.

இதன் காரணமாக பிரித்தானியாவில் கொரோனா பாதுகாப்பு குறித்த வழிகாட்டுதல்களை மாற்றுமாறு அரசாங்கத்திடம் வணிகத் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சில அலுவலகங்களில் ஐந்து மேசைகளில் ஒன்றை மட்டுமே பயன்படுத்த முடிவதாக புகார் அளித்த பின்னர் வணிகத் தலைவர்கள் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

வணிகச் செயலாளரான அலோக் சர்மா வியாழக்கிழமை ஆறு முக்கிய நிறுவனங்களின் முதலாளிகளைச் சந்தித்தார்.

இதன் போது ஊழியர்களை மீண்டும் பணியிடத்திற்கு வரவழைக்க இன்னும் பலவற்றைச் செய்ய வேண்டும் என முதலாளிகள் அசோக் சர்மாவிடம் கூறியுள்ளனர்.

புதிய புள்ளிவிவரங்கள் படி, ஆகஸ்டில் நகரத்தின் மிக முக்கியமான கடைகள் மற்றும் வணிகங்கள் இருக்கும் தெருக்களில் விற்பனை வீழ்ச்சியடைந்ததை காட்டியது, கடந்த ஆண்டை விட வியாபாரம் 42 சதவீதம் குறைந்துள்ளது.

Eat Out to Help Out திட்டத்தின் வெற்றி மற்றும் கடைகளில் அதிக தள்ளுபடி இருந்தபோதிலும் விற்பனை கடுமையாக வீழச்சியடைந்துள்ளது.

வீட்டிலிருந்து வேலை செய்வது மிக முக்கியமான கடைகள் மற்றும் வணிகங்கள் இருக்கும் தெரு விற்பனைக்கு பேரழிவு விளைவை ஏற்படுத்துவதாக சில்லறை விற்பனையாளர்கள் கூறினர்.

மேலும், அரசாங்கம் தனது ‘work from home if you can’ செய்தியை மாற்றத் தவறியதாகக் குற்றம் சாட்டினர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்