இங்கிலாந்தில் பள்ளிகள் திறந்து சில நாட்களிலேயே வீட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்ட மாணவர்கள்: வெளியான பின்னணி

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பள்ளிகள் திறந்து சில நாட்கள் கூட ஆகாத நிலையில், குறைந்தது ஏழு பள்ளிகள் தங்கள் மாணவர்களை தனிமைப்படுத்தலுக்கு அனுப்பியுள்ளன.

கிரேட்டர் மான்செஸ்டர், யார்க்‌ஷையர், லைசெஸ்டர்ஷையர், லன்காஷையர் மற்றும் பக்கிங்காம்ஷையர் ஆகிய இடங்களிலுள்ள பள்ளிகளில் கொரோனா தொற்று பரவத்தொடங்கியதையடுத்து, ஏழு பள்ளிகள் மாணவர்களை வீட்டுக்கு அனுப்பியுள்ளன, ஒரு பள்ளி தாமதாக திறக்க முடிவுசெய்துள்ளது.

குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமானால் பக்கிங்காம்ஷையரிலுள்ள Sir William Borlase's Grammar பள்ளியில் பயிலும் 20 மாணவர்கள் விடுமுறைக்காக தீவு ஒன்றிற்கு சென்ற இடத்தில் பார்ட்டியில் பங்கேற்றதைத் தொடர்ந்து அவர்களுக்கு கொரோனா தொற்றியுள்ளது தெரியவந்துள்ளது.

ஆகவே, அந்த பள்ளியை திறப்பதை தாமதப்படுத்த பள்ளி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அந்த பள்ளி மாணவர்களில் ஒருவர் வெளியிட்ட டிக் டாக் வீடியோ ஒன்றில், தாங்கள் சென்ற சுற்றுலாவின்போது மாஸ்க் அணியவோ சமூக இடைவெளியைப் பின்பற்றவோ இல்லை என்பதை பெருமையாக கூறிக்கொள்ள, வீடியோவைப் பார்த்தவர்கள் கடும் எரிச்சலடைந்தார்கள்.

தற்போது மேலும் ஏழு பள்ளிகள், பள்ளி துவங்கி சில மணி நேரமே ஆன நிலையில், மாணவர்களை வீட்டுக்கு திருப்பி அனுப்பியுள்ளன.

கொரோனா இருப்பதாக தெரியவந்த மாணவர் ஒருவர் இருந்தாலும், அவருடன் பயிலும் மாணவர்களும் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்