இரு பெண்களை கொன்று ப்ரீசரில் அடைத்த நபருக்கு இன்று தண்டனை: அவன் நரகத்தில் கிடந்து அழுகட்டும் என சபித்த குடும்பத்தினர்!

Report Print Balamanuvelan in பிரித்தானியா
255Shares

பெண்கள் இருவரை கொன்று ப்ரீசர் ஒன்றுக்குள் அடைத்த குற்றவாளி ஒருவருக்கு இன்று சிறைத்தண்டனை வழங்கப்பட்ட நிலையில், அவன் நரகத்தில் கிடந்து அழுகட்டும் என பாதிக்கப்பட்ட பெண் ஒருவரின் குடும்பத்தினர் சபிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.

பிரித்தானியாவில் Zahid Younis (36) என்னும் நபர், Henriett Szucs (34) என்ற ஹங்கேரி நாட்டுப்பெண்ணை 2016ஆம் ஆண்டு கொலை செய்து ப்ரீசர் ஒன்றிற்குள் அடைத்து வைத்துள்ளான்.

பின்னர் இரண்டு ஆண்டுகளுக்குப்பின் Mihrican Mustafa (38) என்ற பெண்ணை கொலை செய்து அவரது உடலையும் அதே ப்ரீசருக்குள் அடைத்துவைத்துள்ளான்.

பொலிசார் Younisஐ கைது செய்யும் நேரத்தில் கிழக்கு லண்டனிலுள்ள அவனது வீட்டிலிருந்த ப்ரீசரைத் திறந்தபோது, அதில் இரண்டு பெண்களின் உடல்களும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இடையில் மின் தடை ஏற்பட்டதால் அழுகிய அந்த உடல்கள், பின் இறுகி ஒரே உடல் போல் ஒன்றுடன் ஒன்று இணைந்துவிட்டிருந்தன.

இன்று Younisக்கு தண்டனை விவரம் வாசிக்கப்பட்டபோது, முகத்தில் எந்த உணர்ச்சியும் காட்டாமல் அமர்ந்திருந்தான் அவன்.

ஆனால், பார்வையாளர்கள் வரிசையில் அமர்ந்திருந்த Mihrican Mustafaவின் குடும்பத்தினர், அவனுக்கு தண்டனை அறிவிக்கப்பட்டதும், Yes என்று கத்தி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.

Younisக்கு நீதிபதி 38 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்ததும், அவரது அக்காவான Mel Mustafa, மகிழ்ச்சியில், நன்றி கடவுளே என நீதிமன்றத்திலேயே சத்தமிட்டார்.

Mihrican Mustafaவுக்கு இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்களாம்... அம்மா வருவார் என அவர்கள் நம்பிக்கையுடன் தேடுவதை நிறுத்தவேயில்லையாம்.

நீ நரகத்தில் கிடந்து அழுக வேண்டும், இனியாவது பெண்கள் நிம்மதியாக இருப்பார்கள் என்று வேதனையுடன் Younisஐ சபித்த Mihrican Mustafaவின் குடும்பத்தினர், அதனால் எங்கள் சகோதரி மீண்டும் வரப்போவதில்லை என்றாலும், எங்களுக்கு நீதி கிடைத்துவிட்டது என்கிறார்கள்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்