வேற வழியே இல்ல! பிரித்தானியாவின் Leeds மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Report Print Basu in பிரித்தானியா
1710Shares

கொரோனா வைரஸ் தொற்று விகிதங்கள் தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருந்தால், ஊரடங்கு கட்டுப்பாடுகளுக்கு "மாற்று" இருக்காது என்று Leedsல் வாழும் மக்களுக்கு நகர சபைத் தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளைத் தவிர்ப்பதற்கு Leeds மக்கள் கூட்டு முயற்சியில் ஈடுபட வேண்டும் என நகர சபைத் தலைவர்கள் எச்சரித்துள்ளனர்.

100,000 பேருக்கு தொற்று வீதம் 29.4 வழக்குகளாக உயர்ந்த பின்னர், இந்த நகரம் பிரித்தானியா பொது சுகாதாரத்தின் வாராந்திர கண்காணிப்பு பட்டியலில் ‘கவலைக்குரிய பகுதி’ என்று சேர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்கான எங்கள் முயற்சிகளில் இது ஒரு முக்கியமான தருணம் என நகர சபைத் தலைவர் ஜூடித் பிளேக் தெரிவித்துள்ளார்.

Leeds நகரில் மேலும் கட்டுப்பாடுகளை யாரும் விரும்பவில்லை என்று அவர் கூறினார்.

யதார்த்தம் என்னவென்றால், நோய்த்தொற்று வீதம் தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருந்தால், மேலும் கட்டுப்பாடுகளை கடுமையாக்குவதை தவிர வேறு வழியில்லை என நகர சபைத் தலைவர் ஜூடித் பிளேக் கூறினார்.

சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, புதன்கிழமை Leedsல் 44 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் அடையாளம் காணப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்