சுவிட்சர்லாந்துக்கு சென்று நேரலையில் வாழ்வை முடித்துக்கொள்ளப்போவதாக அறிவித்த பிரித்தானிய பெண்: அதிர்ச்சிக்குப் பின் நடந்த அற்புதம்!

Report Print Balamanuvelan in பிரித்தானியா
277Shares

அரிய வகை நோயால் அவதியுற்று வந்த பிரித்தானிய பெண் ஒருவர், சுவிட்சர்லாந்துக்கு சென்று தன் வாழ்வை முடித்துக்கொள்ளப்போவதாக அறிவித்த விடயம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

சிஸ்டிக் பைப்ரோசிஸ் என்ற நோயால் அவதியுற்று வந்த Jennie Thornton (40) என்ற பெண் சுவிட்சர்லாந்துக்கு சென்று நேரலையில் தன் வாழ்வை முடித்துக்கொள்ளப்போவதாக அறிவித்திருந்தார்.

இப்படிப்பட்ட ஒரு நோய் இருக்கும்போது, கொரோனா வேறு தாக்கிவிட்டால் இன்னும் கஷ்டமாகிவிடும் என அவர் பயந்துகொண்டிருந்தார் அவர். ஆனால், கொரோனா ஊரடங்கு அவருக்கு நன்மையை செய்திருக்கிறது.

ஆம், ஊரடங்கு காலத்தின்போது, பிரித்தானியாவில் சிஸ்டிக் பைப்ரோசிஸ் நோய்க்கான Kaftrio சிகிச்சை என்னும் சோதனை முறை சிகிச்சைக்கு அவரையும் தேர்ந்தெடுத்திருந்தார்கள்.

காலை 10.30க்கு அந்த சிகிச்சையில் வழங்கப்படும் மருந்துகளை உட்கொண்டார் Jennie. ஆச்சரியப்படும் வகையில், மாலை 4.30 மணி ஆகும்போது, இதுவரை அவரை ஓயாத தொல்லையாக வருத்தி வந்த இருமல் குறைந்திருந்தது.

இரண்டு வாரங்களில் அவரது நுரையீரல் 60 சதவிகிதம் வேலை செய்யத் தொடங்கியிருந்தது. பின்னர் அவரது எடையும் கூட ஆரம்பித்தது.

மொத்தத்தில், இனி நான் சாகப்போவதில்லை என்பதை உணர்ந்தேன் என்கிறார் Jennie. அந்த சிகிச்சை Jennieயை மீண்டும் அவரது வாழ்வை அனுபவிக்கச் செய்துள்ளதுடன், மலையேற்றம், நீச்சல் என் அத்தனை ஆசைகளையும் நிறைவேற்றிக்கொண்டுள்ளார் அவர்.

வாழ்வின் கடைசி நாட்களை வலியுடன் செலவிடுவதைவிட, கருணைக்கொலை மூலம் வாழ்வை முடித்துக்கொள்ளலாம் என்று எண்ணியிருந்த Jennieக்கு, Kaftrio சிகிச்சை மறுவாழ்வு அளித்துள்ளது என்றே கூறவேண்டும்!

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்