லண்டனில் 5 வருடங்களாக இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்! இருமுறை கருக்கலைப்பு செய்தது அம்பலம்... முழு தகவல்

Report Print Raju Raju in பிரித்தானியா

லண்டனில் இளம்பெண்ணை 5 வருடங்களாக சீரழித்து கர்ப்பமாக்கிய நபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

லண்டனின் Tottenhamல் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.

Adrian Donaldson என்ற 37 வயது நபர் இளம்பெண் ஒருவரை தனது வீட்டுக்கு வரவழைத்து வாரத்தில் இரண்டில் இருந்து மூன்று முறை வரை தவறாக நடந்து கொண்டிருக்கிறார்.

இப்படி 2015 ஜனவரியில் இருந்து 2020 ஜனவரி வரை செய்திருக்கிறார். மது அருந்தும் போதும், போதை மருந்துகளை எடுத்து கொள்ளும் போதுமே Adrian இப்படி நடந்து கொண்டார்.

பாதிக்கப்பட்ட இளம்பெண் 12 வயதில் இருந்தே Adrianயிடம் சிக்கியிருக்கிறார். மேலும் அவர் 2017 மற்றும் 2018ல் இருமுறை கர்ப்பமான நிலையில் கருக்கலைப்பும் செய்துள்ளார்.

இதோடு பள்ளியில் தன்னிடம் படிக்கும் மாணவன் தான் கர்ப்பத்துக்கு காரணம் என தாயாரிடம் பொய் சொன்னார், ஏனெனில் Adrianன் மிரட்டலுக்கு பயந்தே இப்படி செய்தார்.

ஆனால் கடந்த ஜனவரி மாதம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நடந்த கொடுமைகளை கண்டுபிடித்து அதிர்ச்சியடைந்த தாயார் இது குறித்து பொலிசில் புகார் கொடுத்தார்.

புகாரையடுத்து பொலிசார் Adrian-ஐ கைது செய்தனர்.

அவர் மீதான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் 20 ஆண்டுகள் தண்டனை விதித்து நேற்று முன் தினம் தீர்ப்பளிக்கப்பட்டது.

மேலும் Adrian மூலம் வேறு யாரேனும் பாதிக்கப்பட்டிருந்தால் தைரியமாக முன் வந்து தெரிவிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்