பிரித்தானியாவில் சமீபத்தில் அதிகரிக்கும் எண்ணிக்கை... மிகப் பெரிய கவலை! எச்சரிக்கும் நாட்டின் துணை தலைமை மருத்துவ அதிகாரி

Report Print Santhan in பிரித்தானியா

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் தொற்று நோய்களின் சமீபத்திய பெரிய மாற்றம் மிகப் பெரிய கவலையை அளிப்பதாக, நாட்டின் துணை தலைமை மருத்துவ அதிகாரி கூறியுள்ளார்.

பிரித்தானியாவில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து கொண்டே வருகிறது.

இது குறித்து நாட்டின் துணை தலைமை மருத்துவ அதிகாரி Jonathan Van Tam, பிரித்தானியாவில் சமீபத்திய பெரிய மாற்றம், அதாவது கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை உயர்வது மிகவும் கவலை அளிப்பதாக கூறியுள்ளார்.

தற்போது இருக்கும் சூழ்நிலையில், இதை மீண்டும் ஒரு தீவிரமாக எடுத்துக் கொள்ளத் தொடங்கியுள்ளோம் இல்லையெனி, பிரித்தானியாவில் இங்கிலாந்தில் அடுத்த சில மாதங்களில் அது வேறு மாதிர் இருக்கும்.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் உள்ள இளைஞர்களிடையே தொற்றுநோய்கள் பின்னர் வயதானவர்களுக்கும் நோய் பரவவுதை குறிப்பிட்ட இவர், வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்ததைத் தொடர்ந்து பிரித்தானியாவின் பல பகுதிகள் கடுமையான கட்டுப்பாடுகளை எதிர்கொள்ள வேண்டியிருப்பதாக தெரிவித்துள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை பிரித்தானியாவில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் 2,988 புதிய வழக்குகளை பதிவானது. இது மே 22 முதல் மிக உயர்ந்த எண்ணிக்கையாகும்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்