சோதனைகள் நிறுத்தப்பட்டாலும்.. பிரித்தானியாவில் இதற்குள் ஆக்ஸ்போர்டு தடுப்பூசி கிடைக்கும்: AstraZeneca சிஇஓ உறுதி

Report Print Basu in பிரித்தானியா

சோதனை இடைநிறுத்தப்பட்ட ஆக்ஸ்போர்டு உருவாக்கி வந்த தடுப்பூசி இந்த ஆண்டின் இறுதிக்குள் அங்கீகரிக்கப்பட்டு கிடைப்பதற்கு இன்னும் சாத்தியம் உள்ளது என AstraZeneca தலைமை நிர்வாக அதிகாரி பாஸ்கல் சொரியட் தெரிவித்துள்ளார்.

இது தற்போது இடைநிறுத்தப்பட்ட சோதனைகள் எவ்வளவு விரைவாக மறுதொடக்கம் செய்யப்படுகின்றன என்பதையும், ஒப்புதல் செயல்முறையையும் சார்ந்துள்ளது என்று சொரியட் கூறினார்.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும் AstraZeneca மருந்து தயாரிக்கும் நிறுவனமும் இணைந்து தயாரித்துவரும் கொரோனா தடுப்பூசியின் மூன்றாவது கட்ட சோதனை நடந்து வந்தது.

பிரித்தானியாவில் சோதனை முயற்சியாக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட தன்னார்வலர் ஒருவருக்கு கடுமையான எதிர்விளைவுகள் ஏற்பட்டுள்ளதையடுத்து, தடுப்பூசி சோதனை திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

நோயாளி transverse myelitis எனப்படும் அரிய முதுகெலும்பு அழற்சி கோளாறுடன் தொடர்புடைய நரம்பியல் அறிகுறிகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தடுப்பூசி சோதனை இடைநீக்கம் செய்யப்படுவது மிகவும் பொதுவானது என AstraZeneca தலைமை நிர்வாக அதிகாரி பாஸ்கல் சொரியட் கூறினார்.

சோதனையில் தன்னார்வலருக்கான நோயறிதலை AstraZeneca அறிந்திருக்கவில்லை, மேலும் அவருக்கு transverse myelitis இருந்ததா என்பது தெளிவாக இல்லை என்றும் மேலும் சோதனைகள் தேவை என்றும் என்று தலைமை நிர்வாக அதிகாரி கூறினார்,

நோயறிதல் ஒரு சுயாதீன பாதுகாப்புக் குழுவில் சமர்ப்பிக்கப்படும், அந்த குழு மீண்டும் சோதனைகளை மீண்டும் தொடங்க முடியுமா என்பதை நிறுவனத்திற்கு தெரிவிக்கும் என .பாஸ்கல் சொரியட் கூறினார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்