பிரித்தானியாவில் பள்ளி மாணவர்கள் சென்ற டபுள் டெக்கர் பேருந்து பாலத்தில் மோதி விபத்து: 16 பேர் காயம்

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பிரித்தானியாவில் பள்ளி மாணவர்கள் சென்ற டபுள் டெக்கர் பேருந்து ஒன்று ரயில்வே பாலத்தில் மோதியதில் 16 பேர் காயமடைந்தனர்.

ரயில்வே பாலம் ஒன்றின் கீழ் வேகமாக சென்ற டபுள் டெக்கர் பேருந்து ஒன்றின் கூரை பாலத்தில் மோதியதில், அந்த பேருந்தின் மேல் கூரை பிய்த்துக்கொண்டு வந்துள்ளது.

இந்த சம்பவத்தில், பேருந்தில் பயணித்த மேல் நிலைப் பள்ளி மாணவர்கள் மூவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

அவர்கள் மூவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். ஆனால், அவர்களுக்கு உயிருக்கு ஆபத்து இல்லை என்று தெரியவந்துள்ளது.

மீதமுள்ள 13 பேருக்கு, சம்பவ இடத்தில் வைத்தே சிகிச்சையளிக்கப்பட்டது. காயமடைந்த அனைவரும் 11 முதல் 16 வயதுள்ள மாணவ மாணவியராவர்.

+++++

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்