லண்டனில் அடுக்கு மாடிக் குடியிருப்பிலிருந்து விழுந்த பெண்ணுக்கு நேர்ந்த சோகம்

Report Print Balamanuvelan in பிரித்தானியா

கிழக்கு லண்டனில் அடுக்கு மாடிக் குடியிருப்பு ஒன்றிலிருந்து ஒரு பெண் விழுந்துவிட்டதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

பொலிசாரின் கூற்றுப்படி, நேற்று இரவு 9.30 மணிக்கு அந்த பெண் விழுந்திருக்கிறார்.

பொலிசார் அந்த இடத்துக்கு விரைந்த நிலையில், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டது தெரியவந்துள்ளது.

Bacon Street என்ற தெருவில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

உயிரிழந்தவர் ஒரு பெண் என்ற ஒரு தகவல் தவிர, அவர் யார் எந்த நாட்டவர், என்ன வயது என எந்த விவரங்களுமே வெளியிடப்படவில்லை.

அது கொலையா, விபத்தா அல்லது தற்கொலையா என எதுவுமே தெரியவராத நிலையில், பொலிசார் தொடர்ந்து அந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்