பிரித்தானியாவில் 4 மாதங்களில் இல்லாத அளவிற்கு கொரோனா பாதிப்பு உயர்வு! பிர்மிங்காமில் ஊரடங்கு: புதிய கட்டுப்பாடுகள்

Report Print Santhan in பிரித்தானியா

பிரித்தானியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கடந்த 24 மணி நேரத்தில் உயர்ந்துள்ள நிலையில், பிர்மிங்காமில் புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரித்தானியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் புதிதாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, 3,539-ஆக உள்ளது.

கடந்த நான்கு மாதங்களில் இல்லாத அளவிற்கு கொரோனாவால் புதிதாக பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 361,677-ஆக அதிகரித்துள்ளது.

(Image: PA)

பொது சுகாதார இங்கிலாந்து புதிய தொற்றால் பாதிக்கப்படுபவர்கள், பெரும்பாலானோர் சமூகத்தில் சோதிக்கப்பட்ட நபர்கள் மற்றும் இளையவர்கள் என்று கூறியுள்ளது.

சுகாதாரத்துறை ஆறு பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதாக உறுதிபடுத்தியுள்ளதால், இறப்பு எண்ணிக்கை 41,608-ஆக உள்ளது.

பொது சுகாதார இங்கிலாந்தின் மருத்துவ இயக்குனர் Yvonne Doyle,கொரோனாவால் புதிதாக 3,539 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இது ஒரே இரவில் பதிவாகியுள்ளது. இது நேற்று பதிவான 2,919 வழக்குகளுடன் ஒப்பிடும்போது. இந்த வழக்குகளில் பெரும்பாலானவை சமூகத்தில் பரிசோதிக்கப்பட்ட நபர்கள்.

(Image: AFP via Getty Images)

இது பிரித்தானியா முழுவதும் வைரஸ் பரவுவதால் நடந்துகொண்டிருக்கும் ஆபத்தை நினைவூட்டுகிறது. மக்கள் தொடர்ந்து சமூக தொலைதூர விதிகளைப் பின்பற்ற வேண்டும்.

தவறாமல் கைகளைக் கழுவ வேண்டும் மற்றும் ஊரடங்கு உள்ள இடங்களில் முகக்கவசம் அணிய வேண்டும். உடல்நிலை சரியில்லாமல் இருக்கும்போது மற்றவர்களுடன் தொடர்பில் இருக்க கூடாது என்று கூறியுள்ளார்.

நேற்று கொரோனாவால் புதிதாக 2,919 பேர் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், புதன்கிழமை 2,659 பேர் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றனர். ஆனால், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.

(Image: AFP via Getty Images)

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் R விகிதம் அதிகாரப்பூர்வமாக 1-ஐ விட அதிகமாக உள்ளது என்றும் லண்டன் மற்றும் வடமேற்கில் R-விகிதம் 1.3-ஆக இருக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்ட நிலையில், இன்றை பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

கொரோனா பரவல் அதிகரித்ததைத் தொடர்ந்து பிர்மிங்காமில் உள்ளூர் ஊரடங்கிற்கான புதிய கட்டுப்பாடுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 15 செவ்வாய்க்கிழமை முதல் இது நடைமுறைக்கு வரும் என்று கூறப்படுகிறது. ஆனால் இன்னும் உறுதியாக தெரியவில்லை, இந்த கட்டுப்பாடு நகர எல்லைக்கு உள்ளேயும் வெளியேயும் பொருந்துமாம்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்