லண்டனில் நள்ளிரவில் 30 வயது பெண்ணுக்கு நடந்த பயங்கரம்! தலைநகரை உலுக்கி வரும் சம்பவத்தால் மக்கள் அச்சம்

Report Print Santhan in பிரித்தானியா

லண்டனில் நள்ளிரவு நேரத்தில் 30 வயது மதிக்கத்தக்க பெண் மர்ம நபரால் துப்பாக்கியால் சுடப்பட்டதால், அவர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பிரித்தானியாவின் தலைநகரான லண்டனில் உள்ளே Maida Vale பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு நேரத்தில், சுமார் 30 வயது மதிக்கதக்க பெண் நடந்து சென்றுள்ளார்.

அப்போது அடையாளம் தெரியாத மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், குறித்த பெண் அந்த இடத்திலே பலத்த காயங்களுடன் கீழே விழுந்துள்ளார்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார் அவரின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால், பொலிசார் தரப்பில் அந்த பெண் யார்? அவரின் நிலை இப்போது எப்படி இருக்கிறது என்பது குறித்து எந்த ஒரு விவரமும் தெரிவிக்கவில்லை.

Picture: Ben Cawthra/LNP)

இந்த சம்பவம் தொடர்பாக யாரும் இதுவரை கைது செய்யப்பட்டவில்லை. ஆனால் மெட்ரோ பொலிசார், குறித்த சம்பவம் வெள்ளிக் கிழமை நள்ளிரவுக்கு சற்று முன்னர் நடந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

சம்பவம் நடந்த இடத்திற்கு தடவியல் அதிகாரிகள் விரைந்து இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தலைநகரான லண்டனில் துப்பாக்கி குற்ற சம்பவங்கள் சமீபகாலமாக சர்வசாதரணமாக நடைபெற்று வருவது போல் தெரிகிறது. ஏனெனில் கடந்த ஜுலை மாதம் வரை லண்டனில் 40 துப்பாக்கிச் சூடுகள் நடந்துள்ளனர்.

இதுவே கடந்த 2019-ஆம் ஆண்டின் இதே காலக்கட்டத்தில் 24 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. இதனால் தலைநகரை துப்பாக் குற்ற சம்பவங்கள் உலுக்கி வருவதால், அங்கு வசிக்கும் சில மக்கள் தங்கள் பாதுகாப்பை எண்ணி அச்சப்படுவதாக கூறப்படுகிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்