பிரித்தானியாவில் அரசாங்கம், பொலிஸ் எச்சரிக்கையை மீறி இரவு தெருக்களில் கூடி மக்கள் செய்த செயல்

Report Print Basu in பிரித்தானியா

பிரித்தானியாவில் எச்சரிக்கையை மீறி மக்கள் இரவு கொண்டாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளின் ஒரு பகுதியாக திங்களன்று புதிய ‘ஆறு பேர் விதி’ நடைமுறைக்கு வரவுள்ள நிலையில் பிரித்தானியாவில் உள்ள மக்கள் இந்த வார இறுதியை கொண்டாட்டமாக கருதக்கூடாது என்று பொலிஸ் கூட்டமைப்பு எச்சரித்திருந்தது.

திங்கட்கிழமை முதல் நடைமுறைக்கு வரும் புதிய விதிகளின் படி, பிரித்தானியாவில் வீட்டிற்கு உள்ளேயும் வெளியிலும் ஆறு பேருக்கு மேல் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது.

கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படுவதற்கு முன்னர் கடைசி வார இறுதியான சனிக்கிழமை இரவு லண்டனின் தெருக்களில் மக்கள் கூட்டமாக கூடி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

பிரித்தானியாவில் ஜூலை மாதத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டபோது, தெருக்களில் மக்கள் நடனமாடி, கட்டிப்பிடிப்பது, பாட்டு பாடி கொண்டாடிய சூப்பர் சனிக்கிழமையை நினைவூட்டும் வகையில் இது இருந்தது.

மத்திய லண்டனில் உள்ள லெய்செஸ்டர் சதுக்கத்தில் பெரியளவில் கூடிய மக்கள், அரசாங்கம் மற்றும் பொலிஸ் விடுத்துள்ள எச்சரிக்கைகளை குறித்து கவலைப்படாமல் இரவு வாழ்க்கையை அனுபவித்து கொண்டாடினர்.

இது கொரோனாவை எதிர்த்து போராட சுகாதார ஊழியர்கள் பாடுபட்டு வரும் நிலையில் மக்கள் கவலைப்படாமல் இவ்வாறு கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளது கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்