பிரித்தானியாவில் துண்டிக்கப்பட்ட கையுடன் நிர்வாணமாக ஓடிய மர்ம மனிதன்: அதிர்ச்சியில் உறைந்த மக்கள்

Report Print Basu in பிரித்தானியா

பிரித்தானியாவில் மர்ம நபர் ஒருவர் நிர்வாணமாக துண்டிக்கப்பட்ட கையுடன் சாலையில் ஓடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிரிம்ஸ்பி பகுதியிலே இச்சம்பவம் அரங்கேறியுள்ளது. அப்பகுதியிலிருந்த வீட்டின் ஜன்னல் கண்ணாடியை உடைத்துக்கொண்ட நிர்வாணமாக வெளியே வந்த மர்ம நபர், துண்டிக்கப்பட்ட கையுடன் சாலையில் ஓடியதை கண்டு மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

துண்டிக்கப்பட்ட கையுடன் மர்ம நபர் ஓடியதாக தகவலறிந்ததை அடுத்து கிரிம்ஸ்பி தெருக்களில் அவசர சேவை அதிகாரிகள் குவிந்தனர்.

நிர்வாண நபர் கடையில் தஞ்சம் புகுந்த நிலையில், சம்பவ இடத்திலே வைத்து துணை மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்தனர் பின்னர் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அந்த நபர் குறித்த வீட்டில் கடத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், கடத்தல்காரர்களிடமிருந்து தப்பி ஜன்னலை உடைத்து ஓடிவந்ததாக நம்பப்படுகிறது.

mirror.co.uk

தற்போது அந்த வீட்டிற்கு காவல்துறையினர் சீல் வைத்துள்ளனர். சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியில் பல பொலிஸ் வாகனங்கள் குவிந்துள்ளன.

குற்றவியல் புலனாய்வாளர்கள் சம்பவயிடத்திற்கு விரைந்து கொண்டிருக்கும் நிலையில் துப்பறியும் நபர்கள் வீடு வீடாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்