பிரித்தானியாவில் 19 வயது மாணவருக்கு 10,000 பவுண்ட் அபராதம்! என்ன தவறுக்கு தெரியுமா? எச்சரிக்கை தகவல்

Report Print Santhan in பிரித்தானியா

பிரித்தானியாவில் பிரம்மாண்டமான ஹவுஸ் பார்ட்டி நடத்திய 19 வயது மாணவருக்கு, புதிய விதிகளின் படி 10000 பவுண்ட் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரித்தானியாவின் Nottingham-ல் உள்ள Lenton-ல் இருக்கும் வீட்டில் Stuart Hawk என்ற 19 வயது கடந்த வெள்ளிக் கிழமை இரவு ஹவுஸ் பார்ட்டி நடத்தியுள்ளார்.

பொதுவாக இப்போது இருக்கும் கொரோனா காலத்தில், விருந்து நிகழ்ச்சியின் போது அதிகமானோர் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அப்படி சமூக இடைவெளியை பின்பற்றாமல், அதிகமானோர் கூடினால் அபராதம் விதிக்கப்படும் என்ற விதி கடந்த ஆகஸ்ட் மாதம் அமுலுக்கு வந்துள்ளது.

(Image: Facebook)

இந்நிலையில் குறித்த மாணவன் நடத்திய விருந்து நிகழ்ச்சியில் மாணவர்கள் 25 பேருக்கு மேல், அதாவது சுமார் 50 பேர் கூடியதாக கூறப்படுகிறது.

இதனால் இதைக் கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், சமூக பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் இரவு 10 மணிக்குப் வீட்டிற்கு சென்று, புதிய விதிகளின் கீழ் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாணவன் பிரபல ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு, என்ன நடந்தது என்பதைப் பற்றி நாங்கள் பேச விரும்பவில்லை, இது ஒரு பெரிய அதிர்ச்சியாக இருந்தது.

mirror.co.uk

நிச்சயமாக நாம் அனைவரும் புண்படுத்தப்பட்ட எந்தவொரு அக்கம் பக்கத்தினரிடம் மன்னிப்பு கேட்க விரும்புகிறோம்.

சமீபத்தில் இரண்டு பேர் தங்களுடன் பழகியவர்கள் 21 வயதை எட்டியதால், அதை கொண்டாடும் விதமாக தற்போதைய கொரோனா விதிமுறைகளின் வழிகாட்டுதல்களுக்கு உட்பட்டு ஒரு கொண்டாட்டம் நடத்த வேண்டும் என்று நாங்கள் நம்பினோம்.

இதனால் 25 நண்பர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். ஆனால் அதை அதிகமானவர்கள் வந்துவிட்டனர். அக்கம் பக்கத்தினரின் நிம்மதியை சீர்குலைப்பது எங்களுடைய நோக்கம் அல்ல என்று கூறியுள்ளார்.

(Image: BPM Media)

ஆறு மாணவர்களில் ஒருவர், நாங்கள் 25 பேரை அழைத்திருந்தோம், இரவு 11 மணிக்கு முடியும் நோக்கில் நாங்கள் இதை ஏற்பாடு செய்திருந்தோம், ஆனால் கையை மீறி சென்றுவிட்டது. நாங்கள் இதற்கு வருந்துகிறோம், அக்கம்பக்கத்தினர் மன்னிக்கும் படி கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்