பூமியைச் சுற்றி பறக்கும் ரஷ்யாவின் பயங்கர அணு ஆயுதம்: பிரித்தானியா வெளியிட்டுள்ள அதிர்ச்சி தகவல்!

Report Print Balamanuvelan in பிரித்தானியா
265Shares

பூமியை பல ஆண்டு காலத்திற்கு சுற்றிக்கொண்டிருக்கும் திறன் கொண்ட ஒரு அணு ஆயுதம் ரஷ்யா வசம் இருப்பதாக தெரிவித்துள்ள பிரித்தானிய பாதுகாப்புத்துறையின் உளவுத்துறை தலைவர் அது தொடர்பான பயங்கர தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பிரித்தானிய பாதுகாப்புத்துறையின் உளவுத்துறை தலைவரான Lt Gen Jim Hockenhull, ரஷ்யா புதிதாக உருவாக்கியுள்ள Skyfall missile என்னும் ஏவுகணை, பூமியைச் சுற்றி பறந்துகொண்டிருக்கும் என்றும், அப்படி பல ஆண்டுகள் தொடர்ந்து பறந்துகொண்டிருக்கும் வகையில் அது உருவாக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், அந்த ஏவுகணையால் என்ன பிரச்சினை என்றால், அது பூமியைச் சுற்றிக்கொண்டிருக்கும் நேரத்தில், அதைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ரஷ்யாவால், எந்த கணத்திலும், உலகின் எந்த பகுதியிலும் திடீர் அணு ஆயுத தாக்குதல் ஒன்றை நடத்த இயலும் என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார் Hockenhull.

Skyfall என்று Natoவால் அழைக்கப்படும் 9M730 Burevestnik வகை ஏவுகணையை, கடந்த ஆண்டு ரஷ்யாவிலுள்ள Nyonoksa என்ற இடத்தில் சோதிக்கும்போது ஏற்பட்ட விபத்து ஒன்றில் குறைந்தது ஐந்து விஞ்ஞானிகள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

அந்த விபத்தால் ஏற்பட்ட கதிரியக்க பாதிப்பு சாதாரணமாக மனிதர்களைக் கொல்லும் அளவைவிட, ஆயிரம் மடங்கு பயங்கரமாக இருந்ததாக கூறப்பட்டது. அந்த ஏவுகணை 2025வாக்கில் ஏவுவதற்கு தயாராகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்