பிரித்தானியாவில் 4.5 மில்லியன் மக்கள் கடும் சிக்கலில்: வீட்டைவிட்டு வெளியேற தடை

Report Print Arbin Arbin in பிரித்தானியா
836Shares

பிரித்தானியாவில் உடல் எடை, வயது மற்றும் உடல் நிலையை கருத்தில் கொண்டு 4.5 மில்லியன் மக்களை வீட்டைவிட்டு வெளியேற தடை விதிக்க வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த விவகாரம் தொடர்பில் குறிப்பிட்ட 4.5 மில்லியன் மக்களுக்கும் தனித்தனியாக கடிதம் மூலம் அறிவுறுத்தப்பட உள்ளதாக தெரிய வந்துள்ளது.

மட்டுமின்றி, அதிக அளவு நோய்த்தொற்று உள்ள பகுதிகளுக்கு இந்த நடவடிக்கை முதலில் அறிமுகப்படுத்தப்படும் என கூறப்படுகிறது.

பிரித்தானியாவில் கொரோனாவுக்கு இலக்காகுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதாலையே இந்த நடவடிக்கையை முன்னெடுக்க சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது.

மேலும், இதே நிலை நீடித்தால், கொரோனா பரவலை தடுக்க மேற்கொள்ளப்பட்ட இதுவரையான முயற்சிகள் அனைத்தும் பாழாகிவிடும் என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது.

புதன்கிழமை வரை முன்னெடுக்கப்பட்ட ஆய்வில் 43 முதியோர் இல்லங்கள் கடும் சிக்கலில் இருப்பதாக தெரிய வந்துள்ளது.

மட்டுமின்றி, கடந்த வாரத்தில் மட்டும் 50 வயதை கடந்த பிரித்தானியர்களில் 92 சதவீதம் பேர்கள் கொரோனா அச்சுறுத்தலில் இருப்பதாகவும், 60 வயது கடந்தவர்களில் 72 சதவீதம் பேர்களும், 80 வயதை கடந்தவர்கள் 44 சதவீதம் பேர்களும் கடும் சிக்கலில் இருப்பது ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து பிரித்தானியாவில் முதியவர்களை காக்கும் நடவடிக்கையில் போரிஸ் அரசாங்கம் களமிறங்கும் என தெரிய வந்துள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்