பிரித்தானியாவில் 2 மாதமாக காணாமல் போன 17 வயது இளம்பெண்ணின் நிலை என்ன? சடலம் கிடைக்கவில்லை என கூறும் பொலிசார்

Report Print Raju Raju in பிரித்தானியா
105Shares

பிரித்தானியாவில் காணாமல் போன 17 வயது இளம்பெண் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற முடிவுக்கு பொலிசார் வந்துள்ள நிலையில் அது தொடர்பில் இருவரை கைது செய்துள்ளனர்.

Peterborough-ஐ சேர்ந்த Bernadette Walker (17) என்ற இளம்பெண் கடந்த ஜூலை 21ஆம் திகதியில் இருந்து காணாமல் போனார்.

பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் பொலிசார் Bernadette-ஐ தேடி வந்தனர்.

இந்த நிலையில் Bernadette கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற முடிவுக்கு பொலிசார் தற்போது வந்துள்ளனர்.

இது குறித்து பொலிசார் கூறுகையில், அவரை எங்கு தேடியும் கிடைக்கவில்லை, ஆகவே Bernadette வழக்கை கொலை வழக்காக மாற்றும் முடிவுக்கு வந்துள்ளோம். அவரின் சடலம் எதுவும் எங்களுக்கு கிடைக்கவில்லை.

அதே சமயம் அவர் உயிருடன் இருக்கலாம் என்ற சிறிய நம்பிக்கையும் உள்ளது.

இது தொடர்பாக 50களில் உள்ள ஆண் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில் 30களில் உள்ல பெண்ணை சமீபத்தில் கைது செய்துள்ளோம்.

Bernadette தொடர்பில் என்ன நடந்தது என்பதை நிச்சயம் கண்டுபிடிப்போம், இது தொடர்பில் யாருக்கேனும் தகவல் தெரிந்தால் எங்களிடம் தெரிவிக்கலாம் என கூறியுள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்