ஆறு பேருக்கு மேல் ஓரிடத்தில் கூட தடை கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்: போரிஸ் ஜான்சனுக்கு நிபுணர்கள் எச்சரிக்கை!

Report Print Balamanuvelan in பிரித்தானியா
244Shares

பிரித்தானியாவில் ஓரிடத்தில் ஆறு பேருக்கு மேல் கூட விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கவேண்டும் என்றும் இல்லையென்றால் பெரிய அளவில் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் நிபுணர்கள் பிரதமர் போரிஸ் ஜான்சனை எச்சரித்துள்ளனர்.

இன்று முதல் இங்கிலாந்து, வேல்ஸ் மற்றும் ஸ்காட்லாந்தில் ஆறு பேருக்கு மேல் ஓரிடத்தில் கூட தடை அமுலுக்கு வந்துள்ள நிலையில், அதை கடுமையாக விமர்சித்துள்ளார்கள் அறிவியலாளர்களான பேராசிரியர்களான Carl Heneghan மற்றும் Tom Jefferson ஆகியோர்.

இரண்டாவது கொரோனா அலையைத் தவிர்ப்பதற்காக போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ள புதிய விதிகள் அவரை கடுமையான அழுத்தத்திற்குள்ளாக்கியுள்ளது.

போரிஸ் ஜான்சனின் முடிவு மனதுக்கு தொந்தரவை ஏற்படுத்தும் முடிவு என்றும், அறிவியல் பூர்வ ஆதாரங்கள் எதுவுமின்றி மக்கள் எத்தனை பேர் கூடலாம் என்ற எண்ணிக்கையைக் குறைத்துள்ளது கடுமையான சமூக பின் விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

சமீபத்திய கொரோனா தொற்று அதிகரிப்பிற்கு அரசு இளைஞர்களை குறை சொல்ல முயல்வதையும் விமர்சித்துள்ள அவர்கள், அப்படி கொரோனா அதிகரிக்கும் என்றால் எதற்காக அரசு Eat Out to Help Out என்னும் அரசு உதவியுடன் மக்கள் ஹொட்டல்களில் உண்ணலாம் என்ற திட்டத்தைக் கொண்டுவந்தது என கேள்வி எழுப்புகிறார்கள்.

அன்றாட மருத்துவத்திற்காக, பல ஆண்டுகள் தாங்கள் மேற்கொண்ட ஆய்வுகளை மேற்கோள் காட்டி, இந்த Rule of Six விதியால், குறைந்த அளவில்தான் நன்மை ஏற்படும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்