பிரித்தானியாவில் வீட்டுக்குள் பாய்ந்த லொறி: சாரதி பலி சிறுவன் உயிருக்கு போராட்டம்!

Report Print Balamanuvelan in பிரித்தானியா
739Shares

பிரித்தானியாவில் வீடு ஒன்றிற்குள் லொறி ஒன்று பாய்ந்து ஏற்பட்ட விபத்தில் ஒருவர் பரிதாபமாக பலியானார், ஒரு சிறுவன் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கிறான்.

கிழக்கு லண்டனின் Kidbrooke பகுதியிலுள்ள சாலை ஒன்றில் காலை போக்குவரத்து பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் நேரத்தில், வேகமாக வந்த லொறி ஒன்று இரண்டு கார்கள் மீது மோதிவிட்டு, அருகிலுள்ள வீடு ஒன்றிற்குள் பாய்ந்துள்ளது.

இந்த கோர விபத்தில், லொறியின் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டார்.

விபத்தில் சிக்கியவர்களில் ஒரு 11 வயது சிறுவனின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. உயிருக்குப் போராடும் அவன், ஏர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளான்.

மேலும் இருவருக்கும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்கள். அவர்கள் நிலை குறித்து தகவல்கள் கிடைக்கவில்லை.

லொறி மோதிய வீடும் கடுமையாக சேதமடைந்துள்ள நிலையில், பொலிசார் அந்த விபத்து தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்