பிரித்தானியாவில் குடிகார கணவனுடன் திருமண உறவை முறித்துக் கொண்ட இந்திய பெண்: பழிவாங்க கணவன் செய்த வெறிச்செயல்

Report Print Balamanuvelan in பிரித்தானியா

குடிகார கணவனுடனான திருமண உறவை முறித்துக் கொண்ட ஒரு இளம்பெண்ணை கொடூரமாக கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார் அவரது கணவர்.

இந்தியாவிலிருந்து ஒரு நல்ல வாழ்க்கைக்காக பிரித்தானியா சென்று வாழ்ந்துவந்த குடும்பம் பிரவீன் பாபுவின் குடும்பம்.

பாபுவின் மகள் பாவினி (21)க்கு இந்தியாவிலிருந்து ஒரு மணமகனை தேர்வு செய்து, அவரை பிரித்தானியாவுக்கு அழைத்துவந்து, திருமணம் செய்வித்து, ஒரு நல்ல வாழ்க்கை அமைத்துக் கொடுத்துள்ளார் பாபு.

ஆனால் பாவினியின் கணவனான ஜிகுகுமார் சோர்தி (23) குடிகாரராக இருந்துள்ளார். அதனால் சமீபத்தில் அவருடனான திருமண உறவை முறித்துக்கொண்டார் பாவினி.

அடுத்த நாள் வேலைக்கு செல்லாமல் இருந்த ஜிகுகுமார், லைசெஸ்டரில் பாவினி இருந்த வீட்டுக்கு கத்தியுடன் சென்றுள்ளார்.

வீட்டில் பாவினியும் அவரது தாயும் மட்டும் இருந்த நிலையில், பாவினியின் நெஞ்சில் கத்தியால் குத்தியுள்ளார் ஜிகுகுமார்.

எப்படியாவது தப்பிவிடவேண்டும் என எண்ணிய பாவினி, இன்னொரு குத்து விழுவதை தவிர்ப்பதற்காக சுருண்டு படுத்துக்கொள்ள, அவரது முழங்காலிலும், முதுகிலும் குத்தியுள்ளார் ஜிகுகுமார்.

பாவினியின் தாய், அவளை விட்டுவிடு, என்னை வேண்டுமானால் கொன்றுவிடு என கதறி கண்ணீர் விட்டிருக்கிறார்.

பாவினியின் உயிர் பெற்ற தாய் கண் முன்னே பிரிய, அங்கிருந்து வெளியேறிய ஜிகுகுமார், கத்தியை தெருவில் வீசிவிட்டு, ஓட்டம் பிடித்திருக்கிறார்.

என்றாலும் இரண்டு மணி நேரத்திற்குப்பின் பொலிசில் சரணடைந்த ஜிகுகுமார், தன் வாழ்க்கையே பாழாகிப்போனதாக தெரிவித்துள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை, ஏழு பெண் நீதிபதிகள் மற்றும் ஐந்து ஆண் நீதிபதிகள் அடங்கிய நீதிபதிகள் அமர்வு ஒன்று, ஜிகுகுமார் குற்றவாளி என முடிவு செய்தது. லைசெஸ்டர் க்ரௌன் நீதிமன்றத்தில் நாளை ஜிகுகுமாருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட உள்ளது.

தாங்கள் தவமிருந்து பெற்றதால் பாவினியை தங்கள் குடும்பத்தின் லட்சுமி என கருதி வந்த குடும்பம், மகிழ்ழ்சி என்னும் செல்வத்தை இழந்து தவிக்கிறது.

பாவினி பேசிய முதல் வார்த்தை அம்மா என்பதாம், அதே போல, தன் தாயின் மடியில் உயிர் துறக்கும்போதும் அவர் அம்மா என அழைத்தபடி உயிர் துறந்ததை சொல்லிச் சொல்லி கதறுகிறது அவரது குடும்பம்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்