பேருந்தில் மாஸ்குக்கு பதில் பயணி பயன்படுத்திய அந்த பொருள்: பதறிய சக பயணிகள்

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பிரித்தானியாவில் பேருந்தில் பயணிக்கும்போது முகத்தில் மாஸ்க் அணிவதற்கு பதில் பயணி ஒருவர் பயன்படுத்திய விடயத்தைக் கண்ட சக பயணிகள் திகிலடைந்தனர்.

மாஸ்குக்கு பதில் அந்த பயணி பயன்படுத்திய பொருள், உண்மையில் பொருளல்ல, உயிரினம்! ஆம், பாம்பு ஒன்றை கழுத்தில் அணிந்து அதைக் கொண்டு முகத்தை மறைத்திருந்தார் அவர்.

அவரைப் பார்க்கும்போதே, மாஸ்க் அணிவது கட்டாயம் முதலான விதிகளை கேலி செய்வதற்காக அவர் அந்த பாம்பை அணிந்திருந்தது தெரிந்தது.

பேருந்தில் பயணித்த 46 வயது பெண் ஒருவர் கூறும்போது, முதலில் நான் அவர் ஒரு வேடிக்கையான மாஸ்க் அணிந்திருக்கிறார் என்றுதான் நினைத்தேன்.

பின்பு அந்த பாம்பு அவரது கழுத்திலிருந்து இறங்கி கைப்பிடியில் ஊர்ந்து சென்றபோதுதான் அது பாம்பு என்பதை உறுதி செய்துகொண்டேன் என்கிறார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்