பிரித்தானியாவில் 300 மாணவர்களை வீட்டிற்கு திருப்பி அனுப்பிய பள்ளி: வெளியான காரணம்

Report Print Basu in பிரித்தானியா

பிரித்தானியாவில் உள்ள ஒரு பள்ளியிலிருந்து சுமார் 300 மாணவர்கள் வீட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

பள்ளி மாணவர்களில் ஒருவருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து மாணவர்கள் வீட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

வில்ட்ஷயரில் உள்ள ராயல் வூட்டன் பாசெட் அகாடமியில் 9ம் வகுப்பு மாணவர்கள் 284 பேர் சுயமாக தனிமைப்படுத்தவும், 14 நாட்களுக்கு வீட்டிருந்த படி வகுப்புகளில் கலந்துக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

அனைத்து முன்னெச்சரிக்கை மற்றும் பபுள்ஸ் நடவடிக்கைகள் பின்பற்றப்பட்டதாகவும், மற்றவர்களுக்கு எந்த ஆபத்தையும் குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பள்ளி தெரிவித்துள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்