லண்டனில் பேருந்து நிலையத்தில் நின்றிருந்த 2 மாணவிகளை வலுக்கட்டாயமாக இழுத்து செல்ல முயன்ற நபர்! நடந்தது என்ன?

Report Print Raju Raju in பிரித்தானியா

லண்டனில் பேருந்து நிலையம் அருகில் நின்று கொண்டிருந்த 2 பள்ளி மாணவிகளை நபர் ஒருவர் கடத்தி செல்ல முயன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.

தெற்கு லண்டனின் Orpingtonல் உள்ள கிராப்டன் சாலையில் தான் இந்த சம்பவம் கடந்த 9ஆம் திகதி மாலை 3 மணியளவில் நடந்துள்ளது.

அங்குள்ள பேருந்து நிலையம் அருகில் 11 வயதான இரண்டு பள்ளி மாணவிகள் நின்றிருந்தனர்.

அப்போது அங்கு காரில் இருந்து இறங்கிய நபர் இருவரையும் கெட்டியாக பிடித்து வலுக்கட்டாயமாக இழுத்து செல்ல முயன்றார்.

ஆனால் அவரிடம் சிக்காத மாணவிகள் அங்கிருந்து தப்பி பள்ளிக்கு சென்றனர், பின்னர் இது குறித்து அவர்களின் பெற்றோர் மற்றும் பொலிசாருக்கு தகவல் தரப்பட்டது.

இந்த சம்பவம் மாணவிகளை வேதனையடைய செய்துள்ள நிலையில் அவர்களுக்கு எந்தவொரு காயமும் ஏற்படவில்லை.

மாணவிகளை கடத்த முயன்ற நபர் வெள்ளை நிற காரில் வந்தார் எனவும் அவரின் வயது 30களில் இருக்கும் என தெரியவந்துள்ளது, காரில் அவருடன் இன்னொரு நபரும் இருந்திருக்கிறார்.

சம்பவம் தொடர்பாக பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்