பிஞ்சுக் குழந்தையை வளர்ப்பு நாயே கடித்துக் குதறிக் கொன்ற கோரம்: பொலிஸ் அதிரடி நடவடிக்கை

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பெற்ற குழந்தையை ஒரு குடும்பம் வளர்த்த நாயே கடித்துக் குதறி கொன்ற கோர சம்பவம் பிரித்தானியாவில் நடந்தேறியுள்ளது.

Doncasterஇல், பிறந்து 12 நாட்களே ஆன Elon என்ற குட்டிக் குழந்தையை நாய் ஒன்று கடித்துக் குதறிக் கொன்றுள்ளது.

இத்தனைக்கும், அந்த நாய் அந்த குழந்தை வீட்டில் வளர்க்கப்படும் நாய்தான். எனவே, குழந்தையின் தாயான Abigail Ellis (27) மற்றும் அவரது காதலர் Stephen Joynes(35) ஆகியோரை பொலிசார் கைது செய்துள்ளார்கள்.

கவனக் குறைவால் உயிரிழப்பு நடந்ததற்கு காரணமாக இருந்ததாக அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அப்பகுதியில் வசிப்பவர்கள், அந்த நாய் முரட்டுத்தனமான நாய் அல்ல என்று கூறினாலும், குழந்தையை மீட்கச் சென்ற மூன்று பொலிசாரை தெருவுக்கு இழுத்து வரும் அளவுக்கு அது பலமுள்ளதாக இருந்திருக்கிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்