பிரித்தானியாவில் கொரோனா பரவலால் மூடப்பட்ட பாடசாலைகளின் பட்டியல் வெளியானது

Report Print Arbin Arbin in பிரித்தானியா

கொரோனா ஊரடங்கு காலத்திற்கு பின்னர் பாடசாலைகள் செயல்பட தொடங்கிய நிலையில், தற்போது கொரோனா பரவல் காரணமாக வேல்ஸ் மற்றும் இங்கிலாந்தில் மூடப்பட்டுள்ள பாடசாலைகளின் பட்டியல் வெளியாகியு:ள்ளது.

வேல்ஸ் மற்றும் இங்கிலாந்தில் குறைந்தது 364 பாடசாலைகள் முற்றிலுமாக மூடப்பட்டுள்ளன அல்லது சில மாணவர்கள் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட பிறகு வீட்டிற்கு அனுப்பியுள்ளன. இந்த எண்ணிக்கையானது மிக அதிகமாக இருக்கும் என்ற அச்சம் அதிகாரிகளால் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சுய-தனிமைப்படுத்த வேண்டிய மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்றும் குளிர்காலம் நெருங்கும்போது அதிகமான பாடசாலைகள் மூடப்படக்கூடும் என்றும் தலைமை ஆசிரியர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனால், மாணவர்களின் கல்விக்கு இடையூறு ஏற்படுவது எதிர்வரும் மாதங்களில் மோசமடையக்கூடும் என பாடசாலைகள் மற்றும் கல்லூரி மாணவர் தலைவர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜெஃப் பார்டன் சுட்டிக்காட்டியுள்ளார்.

பாதிப்புக்கு உள்ளான பாடசாலைகள் செயல்படும் பகுதிகள்:

 • Accrington
 • Aylesford
 • Aylsebury
 • Ashford
 • Barnoldswick
 • Barnsley
 • Birmingham
 • Blackburn
 • Bolton
 • Bradford
 • Bristol
 • Coventry
 • Lanchester
 • Leicester
 • Manchester
 • Merseyside
 • Middlesborough
 • Northampton
 • Oldham
 • Rochdale
 • Salford
 • Sittingbourne
 • Sunderland
 • Wigan
 • Wolverhampton

மேலதிக தகவல்களுக்கு

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்