பிரித்தானியர்களுக்கு எச்சரிக்கை! வரும் ஜனவரி 1 முதல் பிரெக்சிட் நடைமுறை: பாஸ்போர்ட் குறித்து முக்கிய தகவல்

Report Print Santhan in பிரித்தானியா

பிரெக்சிட் வரும் ஜனவரி முதல் முழுமையாக நடைமுறைக்கு வருவதால், பிரித்தானியாவில் இருந்து ஐரோப்பாவுக்கு செல்லும் மக்கள் சில புதிய விதிமுறைகள் எதிகொள்வார்கள் என்று எச்சரிக்கப்படுகிறது.

ஜனவரி 1-ஆம் திகதி பிரெக்சிட் முழுமையாக நடைமுறைக்கு வருவதால் ஐரோப்பாவுக்குச் செல்வதற்கான விதிகள் அடிப்படையில் மாறுகின்றன.

அதாவது, அடுத்த ஆண்டு நீங்கள் கண்டத்தில் இருந்து வெளியேற திட்டமிட்டால், சில மாற்றங்களைச் செய்ய வேண்டியிருக்கும்

இதையே ஐரோப்பாவுக்குச் செல்லும் பிரித்தானியா மக்கள் ஜனவரி 1 முதல் புதிய விதிமுறைகளை எதிர்கொள்வார்கள் என்று கூறப்படுகிறது.

(Image: Getty Images)

ஒரு புதிய விதிமுறைகள் 2021 ஆம் ஆண்டிலிருந்து வரவிருப்பதால், பயணிப்பதற்கு முன்னால் மக்கள் இப்போது அதை சரிபார்க்க வேண்டியது, அவசியம் என்று வலியுறுத்தப்படுகிறது.

பாஸ்போர்ட்

பாஸ்போர்ட்டின் நிறம் எதுவாக இருந்தாலும் பரவாயில்லை, அது செல்லுபடியாகும். அயர்லாந்து செல்லும் மக்களுக்கு பாஸ்போர்ட் விதிகளில் எந்த மாற்றமும் இல்லை.

ஆனால், உங்கள் பாஸ்போர்ட்டை நீங்கள் புதுப்பிக்கவில்லை என்றால், நீங்கள் பெரும்பாலான ஐரோப்பிய ஒன்றிய நாடுகளான ஐஸ்லாந்து, லிச்சென்ஸ்டீன், நோர்வே மற்றும் சுவிட்சர்லாந்திற்கும் பயணிக்க முடியாது.

ஓட்டுனர் உரிமம்

ஐரோப்பிய ஒன்றியத்தில் வாகனம் ஓட்டுவதற்கு பிரித்தானியாவின் ஓட்டுனர் உரிமங்கள் தானாகவே செல்லுபடியாகும். ஆனால் வரும் ஜனவரி 1 முதல் ஒரு சில நாடுகளில், சர்வதேச ஓட்டுநர் அனுமதி (IDP)போன்ற கூடுதல் ஆவணங்கள் தேவைப்படலாம்.

(Image: Getty Images)

இந்த ஆவணம் 5.50 பவுண்ட் எனவும், இது தபால்நிலையத்தில் எடுக்கப்படலாம். ஆனால் நாடு சார்ந்து மாறுபடலாம் என்பதால், நீங்கள் சரியான வகையை பெறுகிறீர்களா என்பதை சரிபார்க்க வேண்டும்.

நீங்கள் உங்கள் சொந்த வாகனத்தை எடுத்துக்கொண்டால், உங்களுக்கு கிரீன் கார்டு அல்லது காப்பீட்டுக்கான சரியான ஆதாரம் மற்றும் GB ஸ்டிக்கர் தேவைப்படலாம்.

செல்லப்பிராணிகள்

தற்போதைய செல்லப்பிராணி பாஸ்போர்ட்டுகள் 2021 முதல் செல்லுபடியாகாது. இதனால் உரிமையாளர்கள் புதியதைப் பெறுவதற்கு பயணத்திற்கு நான்கு மாதங்களுக்கு முன்பு தங்கள் கால்நடைகளுடன் தொடர்பு கொள்ள வேண்டும்.

(Image: Press Association)

மேலும், ஒரு விலங்கு சுகாதார சான்றிதழைப் பெற உங்கள் செல்லப்பிராணியை மைக்ரோசிப்ட், தடுப்பூசி மற்றும் ரேபிஸுக்கு பரிசோதிக்க வேண்டும்.

மொபைல் போன் ரோமிங்

சட்டப்படி, நீங்கள் ஐரோப்பிய ஒன்றியத்தில் எங்கிருந்தாலும் எப்போதும் இருப்பது போல் நிமிடங்கள், பேசுவது, டேட்டா போன்றவை இருக்கும்.

ஆனால், அது எல்லாம் ஜனவரி 1 அன்று நிறுத்தப்படலாம் என்பதால், நீங்கள் செலுத்த வேண்டியதைக் காண உங்கள் மொபைல் ஒப்பந்தத்தை நீங்கள் சரிபார்க்க வேண்டும்.

இதில், நல்ல செய்தி என்னவென்றால், பல நிறுவனங்களான, EE, வோடபோன், 3 மொபைல் மற்றும் O2 உட்பட - ரோமிங் கட்டணங்களை மீண்டும் அறிமுகப்படுத்த தற்போதைய திட்டங்கள் எதுவும் இல்லை என்பது தான், ஆனால் அதுவும் மாறலாம் என்பதால், அதை நீங்கள் முன்னரே உறுதி செய்து கொள்வது நல்லது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்