பிரித்தானியா தலைநகரின் நிலைமை... மேயர் வெளியிட்ட முக்கிய தகவல்: மிகுந்த கவலையில் இருப்பதாக வேதனை

Report Print Basu in பிரித்தானியா
8115Shares

பிரித்தானியா தலைநகர் லண்டனில் கொரோனா வைரஸ் பரவுவதை மெதுவாக்க ஊரடங்கு கட்டுப்பாடுகளின் தேவை அதிகரித்துள்ளது என மேயர் எச்சரித்துள்ளார்.

வைரஸ் கட்டுப்பாட்டை மீறுவதற்கு முன்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில் தான் உறுதியாக இருப்பதாக லண்டன் மேயர் சாதிக் கான் கூறினார்.

அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க லண்டன் கவுன்சில் தலைவர்கள், அரசு மற்றும் பிரித்தானியா பொது சுகாதாரம் ஆகியோருடன் அவசர கூட்டத்தை நடத்தியதாக அவர் கூறினார்.

பிரித்தானியா முழுவதும் கொரோனா இரண்டாவது அலையின் தொடக்கத்தை நாம் இப்போது காண்கிறோம் என்று பிரதமர் கூறியுள்ளதை கான் மேற்கோள் காட்டியுள்ளார்.

கொரோனா இப்போது லண்டனில் பரவி வரும் வேகத்தை பற்றி பொது சுகாதார நிபுணர்களிடமிருந்து நான் கண்ட சமீபத்திய ஆதாரங்களால் மிகவும் கவலைப்படுகிறேன் என்பதையும் லண்டன் மக்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

லண்டனில், வைரஸ் பரவுவதை மெதுவாக்க விரைவில் கூடுதல் நடவடிக்கைகள் தேவைப்படும்.

பிரித்தானியாவின் பிற பகுதிகளில் ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ள சில நடவடிக்கைகளை லண்டனில் அமல்படுத்துவது குறித்து நாங்கள் பரிசீலிப்போம் என லண்டன் மேயர் சாதிக் கான் தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்