தேனிலவுக்கு பணம் சேர்ப்பதற்காக பிரித்தானிய இளம்பெண் செய்த மோசமான செயல்

Report Print Balamanuvelan in பிரித்தானியா

இம்மாதம் திருமணம் செய்துகொள்ளவிருந்த ஒரு பெண், தேனிலவுக்கு செல்வதற்காக பணம் சேர்ப்பதற்காக செய்த மோசமான செயலுக்காக சிறைக்கு செல்கிறார்.

Warringtonஐச் சேர்ந்த Terrie Renwick (28) வீட்டை பொலிசார் சோதனையிட்டபோது, அவர் கழிப்பறைக்குள் கைவிட்ட நிலையில் இருப்பதை பொலிசாரில் ஒருவர் கவனித்துள்ளார்.

அந்த பொலிசார் ஏற்கனவே பிளம்பராக பணியாற்றியவர் என்பதால், அந்த கழிப்பறையிலிருந்து வெளியேறும் குழாயை சோதித்துள்ளார் அவர்.

சோதனையில், அந்த குழாய்க்குள், 220 பொட்டலங்களில் ஹெராயின் மற்றும் கொக்கைன் என்னும் போதைப்பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது. ஆகவே, Terrieயை பொலிசார் கைது செய்துள்ளனர்.

அவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த மாதம் திருமணம் செய்துகொண்டு தேனிலவுக்கு செல்லலாம் என்ற கனவில் இருந்த Terrie, இப்போது சிறைக்கு செல்கிறார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்