பிரித்தானியாவை மீண்டும் முடக்குவதைத் தவிர வேறு வழியில்லை! பிரதமர் போரிஸ் ஜான்சனை எச்சரிக்கும் அறிவியலாளர்கள்

Report Print Balamanuvelan in பிரித்தானியா
3546Shares

இன்னும் சில வாரங்களில் பிரித்தானியா நூற்றுக்கணக்கான கொரோனா உயிரிழப்புக்களை சந்திக்க நேரிடும் என்று கூறியுள்ள அறிவியலாளர்கள், இரண்டாவது முறையாக பிரித்தானியாவை முடக்குவதைத் தவிர வேறு வழியில்லை என பிரதமரை எச்சரித்துள்ளனர்.

ஆகவே, வேறு வழியின்றி பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சனும் அவர் பங்குக்கு கொரோனா கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த இருப்பதாக மக்களை அச்சுறுத்தியுள்ளார்.

அத்துடன், பிரித்தானிய பொருளாதாரத்தை மீட்கும் முயற்சியாக மக்களை அலுவலகங்களுக்கு வருமாறும், உணவகங்களில் உண்ண வருமாறும் அழைப்பு விடுத்த அவரே, இப்போது மக்கள்தான் கொரோனா அதிகரிக்க காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளார்.

இரண்டாவது ஊரடங்கை அறிமுகப்படுத்துவதைத் தவிர்க்கமுடியாது என ஏற்கனவே அவர் சூசகமாக தெரிவித்துள்ள நிலையில், தனது Rule of Six விதிகளை கைவிட்டுவிட்டு, ஆறு மாதங்களுக்கு, கொரோனா சுற்றை உடைக்கும் 'circuit breakers' என்னும் 15 நாட்கள் ஊரடங்கு திட்டத்தை அமுல்படுத்தும் யோசனையில் இருக்கிறார் போரிஸ் ஜான்சன்.

அதாவது, குளிர்காலத்தில் பிரித்தானியாவை நடத்த, ஒவ்வொரு இடமாக தீவிர கட்டுப்பாடுகளை குறுகிய காலகட்டத்திற்கு அறிமுகப்படுத்தும் திட்டமாகும் இது.

இதன் கீழ், ஒரு வீட்டிலிருப்பவர்களும் மற்றொரு வீட்டிலிருப்பவர்களும் தொடர்பு கொள்ள தடை, சிறு இடைவேளைகளுடன் மதுபான விடுதிகள் மற்றும் உணவகங்கள் முதலானவற்றை மூடுதல், கடைசி முயற்சியாக பள்ளிகளை மூடுதல் ஆகிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளன.

இந்த 'circuit break' முடக்கம், தொலைக்காட்சி வாயிலாக அல்லது ஊடகவியலாளர்கள் சந்திப்பு மூலமாக வரும் செவ்வாயன்று அறிவிக்கப்படும் என தெரிகிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்