பிரித்தானிய பிரதமருக்கு ஒரு பர்சனல் பிரச்சினை: இல்லை இல்லை பிரெக்சிட்டோ கொரோனாவோ இல்லை...

Report Print Balamanuvelan in பிரித்தானியா
2468Shares

ஒரு பக்கம் பிரெக்சிட், மறு பக்கம் கொரோனா என பொது வாழ்க்கையில் பிரச்சினைகள் பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சனை புரட்டி எடுத்து வருகின்றன. இதற்கிடையில், போரிஸ் ஜான்சனுக்கு எதிர்பாராத ஒரு பர்சனல் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே நிர்வாக பிரச்சினைகளால் ஒரு வழியாகிவிட்ட ஜான்சன், இப்போது தனிப்பட்ட பிரச்சினை ஒன்றால் கடுமையான மன அழுத்தத்திற்குள்ளாகியிருக்கிறார், உடைந்துபோனார் என்றெல்லாம் Daily Mail Online பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

ஆம், அதற்கு காரணம் போரிஸ் ஜான்சனின் ஊதியம் திடீரென குறைக்கப்பட்டுவிட்டதுதானாம்.

இதற்குமுன் ஆண்டொன்றிற்கு 350,000 பவுண்டுகள் ஊதியம் பெற்று வந்த ஜான்சனுக்கு,இப்போது ஊதியம் 150,000 பவுண்டுகளாக குறைக்கப்பட்டுள்ளதாம்.

ஏற்கனவே அரசியல் பிரச்சினைகள் புரட்டி எடுக்க, எப்போதும் எல்லோருடனும் சகஜமாகவும் உற்சாகமாகவும் பழகி வரும் போரிஸ் ஜான்சன், இந்த செய்தி வந்ததிலிருந்து மிகவும் கவலையுடன் இருக்கிறாராம்.

ஒரு பக்கம் விவாகரத்தால் முன்னாள் மனைவி Marina Wheelerக்கு கொடுத்த ஜீவனாம்சம், தனது ஆறு குழந்தைகளில் பல்கலைக்கழகத்தில் பயிலும் நான்கு பேரை கவனித்துக்கொள்ள வேண்டிய சூழல், என செலவு ஏராளம் ஆகும் நிலையில், ஜான்சனுக்கு இப்போது பிறந்த புதிய குழந்தையான வில்பிரடை கவனித்துக் கொள்வதற்கு ஒரு ஆயா கூட வைத்துக்கொள்வதற்கு முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாம்.

மற்ற பிரித்தானிய பிரதமர்களைப்போலவே, போரிஸ் ஜான்சனும் மிக மோசமாக நடத்தப்படுவதாக தெரிவிக்கிறார் அவரது நண்பர் ஒருவர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்