லண்டனில் உயிரிழந்த இளைஞரின் பிரேத பரிசோதனையில் தெரிந்த திடுக்கிடும் உண்மை: பொலிசார் வெளியிட்ட புகைப்படம்

Report Print Santhan in பிரித்தானியா
8006Shares

லண்டனில் உயிரிழந்த 23 வயது இளைஞனின் பிரேத பரிசோதனை அறிக்கையில் தலையில் ஏற்பட்ட காயத்தால் அவர் உயிரிழந்தார் என்ற திடுக்கிடும் தகவல் தெரியவந்துள்ளது.

கடந்த வியாழக்கிழமை காலை உள்ளூர் நேரப்படி 6 மணியளவில், தென் மேற்கு லண்டனின் Mitcham அருகே நபர் ஒருவர் தீ காயங்களுடன் கிடப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார், அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

(Image: SWNS.COM)

ஆனால், உயிரிழந்த நபர் யார்? அவரின் புகைப்படம் குறித்து எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை.

இந்நிலையில், தற்போது உயிரிழந்த நபரின் பெயர் Loeike Guei எனவும் 23 வயது மதிக்கத்தக்க இவர் Thornton Heath பகுதியில் வசித்து வந்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.

அதுமட்டுமின்றி இவருடைய பிரதே பரிசோதனை அறிக்கையில், அவர் தலையில் ஏற்பட்ட காயத்தால் உயிரிழந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளதால், இது ஒரு கொலையாக இருக்கலாம் என்று பொலிசார் சந்தேகிக்கின்றனர்.

(Image: Alex Lentati/LNP)

குறித்த நபரின் மரணம் சந்தேகமாக இருப்பதால், மரணம் தொடர்பாக இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என்றும் குற்றம் நடந்த இடம் மற்றும் முழு சூழ்நிலைகள் குறித்துவிசாரணைகள் நடந்து வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த சம்பவம் குறித்து பொலிசார் விசாரணையின் ஆரம்ப கட்டத்தில் இருப்பதாகவும், இது குறித்து பலருடன் விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loeike Guei-வின் மரணத்தை கேட்டு அவரின் குடும்பம் ஒட்டு மொத்தமாக அதிர்ச்சியில் இருப்பதாக பிரபல ஆங்கில ஊடகம் ஒன்று குறிப்பிட்டுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்