பிரித்தானியாவில் கொரோனா கட்டுப்பாடுகளை மீறுபவர்களுக்கு விதிக்கப்படும் அபராதம் உயர்த்தப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் நோய்த்தொற்றின் இரண்டாவது அலைகளைத் தடுக்கும் நோக்கில் தனிமைப்படுத்தல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டள்ளது.
பிரித்தானியாவில் செப்டம்பர் 28 முதல், கொரோனா உறுதியானவர்கள் அல்லது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பு கொண்டவர்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும்.
இந்த தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை மீறுபவர்களுக்கு கிட்டத்தட்ட 1000 பவுண்ட் முதல் 10,000 பவுண்ட் வரை வரை அபராதம் விதிக்க நேரிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விதிகளை புறக்கணிக்கும் நபர்கள் குறிப்பிடத்தக்க அபராதங்களை எதிர்கொள்ள நேரிடும். இந்த வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தவும், மிகவும் பாதிக்கப்படக்கூடிய மக்கள் பாதிக்கப்படுவதைத் தடுக்கவும் தங்களால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும் என்று பிரதமர் ஜான்சன் கூறினார்.