பிரித்தானியா இக்கட்டான நிலையில் உள்ளது: நாட்டு மக்களுக்கு சுகாதார அமைச்சர் முக்கிய எச்சரிக்கை

Report Print Basu in பிரித்தானியா

கொரோனாவால் பிரித்தானியா இக்கட்டான நிலையில் உள்ளது என்று சுகாதார அமைச்சர் மாட் ஹான்காக் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க வடிவமைக்கப்பட்ட அரசாங்க விதிகளை மக்கள் பின்பற்றாவிட்டால் இரண்டாவது தேசிய ஊரடங்கு விதிக்கப்படலாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பிரித்தானியாவில் கொரோனா வழக்குகள் சமீபத்திய வாரங்களில் ஒரு நாளைக்கு 4,000-க்கும் அதிகமாக அதிகரித்துள்ளன,

இதை கொரோனாவின் இரண்டாவது அலை என பிரதமர் போரிஸ் ஜான்சன் அழைத்தார் மற்றும் நாடு முழுவதும் உள்ள பகுதிகளில் கடுமையான ஊரடங்கு நடவடிக்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பிரித்தானியா இக்கட்டான நிலையை எதிர்கொள்கிறது, ஒரு முடிவைத் தேர்ந்தெடுக்கும் நிலையில் தான் நாங்கள் இருக்கிறோம்.

ஒன்று எல்லோரும் விதிகளைப் பின்பற்ற வேண்டும் அல்லது நாங்கள் கூடுதல் நடவடிக்கைகளை எடுக்க வேண்டியிருக்கும்.

இரண்டாவது தேசிய ஊரடங்கை நான் நிராகரிக்கவில்லை, ஆனால் அதை நான் விரும்பவில்லை என்று மாட் ஹான்காக் கூறினார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்