லண்டன் இன்னும் சில நாட்களுக்குள் இதை எதிர் கொள்ளக் கூடும்! மக்களுக்கு எச்சரிக்கை தகவல்

Report Print Santhan in பிரித்தானியா

பிரித்தானியாவில் கொரோனா பரவல் தீவிரமாகி வரும் நிலையில், தலைநகரான லண்டன் புதிய கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை சில நாட்களுக்குள் எதிர் கொள்ளக் கூடும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

ஐரோப்பிய நாடுகளில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

இதனால் உலக சுகாதார அமைப்பு கட்டுப்பாடுகள் தளர்த்தும் விஷயத்தில் கவனமுடன் செயல்படும் படி அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில், பிரித்தானியாவில் சமீப நாட்களாக கொரோனாவால் புதிதாக பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 4,422 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 22 பேர் உயிரிழந்துள்ளனர்.

(Picture: REX)

இதனால் பிரித்தானியாவில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படவுள்ளது. தலைநகரான லண்டனிலும் கொரோனா வழக்குகள் அதிகரித்து வருவதால், இன்னும் சில நாட்களில் லண்டனில் ஊரடங்கு கொண்டு வரப்படலாம் என்ற கேள்விக்கு சுகாதார செயலாளர் ஒப்புக் கொண்டுள்ளார்.

தலைநகரில் என்ன நடவடிக்கை தேவை என்பது குறித்து லண்டன் மேயர் Sadiq Khan-வுடன் வார இறுதியில் பேசியதாகவும், தலைநகரில் புதிய கட்டுப்பாடுகள் குறித்து நிராகரிக்க மாட்டேன் என்றும் Matt Hancock கூறியுள்ளார்.

Matt Hancock நாளை சபை தலைவர்களை சந்தித்து நகரத்திற்கான நடவடிக்கைகள் குறித்து விவாதிப்பார் என்றும் நாளைக்கு முன்பே கடுமையான புதிய கட்டுப்பாடுகளை பரிந்துரைக்க முடியும் என்று கூறப்படுகிறது.

ILondon Mayor Sadiq Khan -mage Source : AP

லண்டன் அலுவலக ஊழியர்களுக்கு அடுத்த வாரம் ஒரு கட்டத்தில் இருந்து வீட்டிலிருந்து வேலை செய்ய அறிவுறுத்த முடியுமா என்று கேட்டதற்கு, Matt Hancock, அப்படி ஒரு கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டால், அதை நான் நிரகாரிக்க மாட்டேன் என்று மீண்டும் கூறியுள்ளார்.

கொரோனாவின் பரவல் அதிகமாகி வருவதால், மிகவும் தாமதமாக இருப்பதை விட மிக விரைவாக செயல்படுவது நல்லது என்று எச்சரித்தார். ஏழு நாட்களில் 100,000 பேருக்கு வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

லண்டனில் 18.8 லிருந்து பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளது.

லண்டன் மேயரின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், நிலைமை தெளிவாக மோசமடைந்து வருகிறது. Sadiq Khan நாளை சபைத் தலைவர்களைச் சந்திப்பார், அதைத் தொடர்ந்து லண்டனுக்கு குறிப்பிட்ட நடவடிக்கைகள் அமைச்சர்களுக்கு பரிந்துரைக்கப்படும்.

அதன் பின் எந்த ஒரு முடிவாக இருந்தாலும், தாமதிக்காமல், விரைவான நடவடிக்கையை மேயர் எடுப்பார் என்று கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்