பிரித்தானியாவிலிருந்து அமெரிக்க துணை ஜனாதிபதி பயணித்த விமானம் நடுவானில் கோளாறானதால் பரபரப்பு!

Report Print Basu in பிரித்தானியா

பிரித்தானியாவிலிருந்து அமெரிக்க துணை ஜனாதிபதி பயணித்த விமானம் நடுவானில் கோளாறானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கில்ஃபோர்டில் நடந்த பிரச்சார நிகழ்ச்சிக்காக அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் நியூ ஹாம்ப்ஷயர் சென்றிருந்தார்.

பிரச்சாரம் முடிந்த நிலையில் அவர் பிரித்தானியாவிலிருந்து ஏர் ஃபோர்ஸ் 2 விமானத்தில் புறப்பட்டார்.

விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே நடுவானில் இன்ஜினில் கோளாறு ஏற்பட்டுள்ளது, இதனையடுத்து நியூ ஹாம்ப்ஷயரில் உள்ள மான்செஸ்டர் விமான நிலையத்தில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் பயணித்த விமானத்துடன் பறவை மோதியதால் இன்ஜின் கோளாறாகி இருக்கலாம் என ஊடக அறிக்கைகள் தகவல் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவத்திற்குப் பிறகு மெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் சரக்கு விமானத்தில் அமெரிக்கா திரும்புவதாகக் கூறப்படுகிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்