எங்களுக்கு பிரித்தானிய மகாராணியார் வேண்டாம்... போர்க்கொடி தூக்கியுள்ள நாடு: பின்னணியில் சீனா?

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பார்படாஸ் நாடு, இனி பிரித்தானிய மகாராணியார் எங்கள் நாட்டின் தலைவராக இருக்கவேண்டாம், எங்கள் நாட்டவர்தான் எங்கள் தலைவராக இருக்கவேண்டும் என்று கூறிவிட்டது.

ஆனால், இதன் பின்னணியில் சீனா இருப்பதாக வெளி விவகாரங்கள் கமிட்டியின் தலைவரான Tom Tugendhat பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை முன் வைத்துள்ளார். 2019இல் சீனா பார்படாசுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்துகொண்டது.

அதைத் தொடர்ந்தே பார்படாஸ் இந்த முடிவை எடுத்துள்ளதைத் தொடர்ந்து, சீனா ஏற்கனவே உட்கட்டமைப்பு முதலீடு மற்றும் பெரிய கடன் உதவி செய்து ஒரு நாட்டை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருதல் ஆகிய யுக்திகளை பயன்படுத்தி வந்தது, இப்போது அது நம்மையே நெருங்கியுள்ளது.

நம் நாட்டுடன் உறவு வைத்துள்ள நாடுகளுடனான உறவை சீனா அவமதிப்பதை நீண்ட நாட்களாகவே நாம் பார்த்துவந்துள்ளோம்.

இப்போது அதை கரீபியன் பகுதியில் பார்க்கிறோம், சில தீவுகள் மகாராணியாரிடம் இருந்து விடுபட்டு கட்டுப்படுத்தும் ஒரு மகாராஜாவை தேர்ந்தெடுக்க முடிவெடுத்துள்ளதுபோல் தெரிகிறது என்கிறார் Tom.

பார்படாஸ் 1966இல் சுதந்திரம் பெற்றுவிட்டாலும், பிரித்தானியாவுடன் நெருக்கமான உறவு வைத்திருந்தது.

ஆனால், கடந்த வாரம் 2021இல் தான் குடியரசாக ஆக விரும்புவதாக அந்நாடு அறிவித்துள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பக்கிங்காம் அரண்மனை வட்டாரம், அது அந்நாட்டின் உள்விவகாரம் என்று கூறிவிட்டது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்